பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

6. ராவுத்தர் பாளையம்  திருநெல்வேலி வட்டம்
7. ராவுத்தர் சாயபு தர்கா  அறந்தாங்கி வட்டம்
8. ராவுத்த ராயன் குப்பம்  திருக்கோயிலூர் வட்டம்
9. ராகுத்த ராய நல்லூர்  ஈரோடு வட்டம்

இவை அனைத்தும் இஸ்லாமியத் தமிழர்களது தொன்மையான இருப்பிடங்கள் என்பதில் ஐயமில்லை. மேலும், ராவுத்தருக்கும் குதிரைக்கும் உள்ள சம்பந்தத்தை தெரிவிக்கும் வழக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் “குதிரைக்காக ராவுத்தர். கொக்காகப் பறந்தார்” என்பது இன்றும் வழக்கில் உள்ளது. ஆனால் தமிழகமெங்கும் உள்ள ராவுத்தர் வழியினரிடம் இன்று குதிரையும் இல்லை; குதிரைச் சேவகமும் தொழிலாக இல்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.