பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

லவே நால்வேத லெப்பைமார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்கப்பணியில் முனைந்து இருப்பவர்கள் என்ற பொருளில் 1881ம் ஆண்டு ஆங்கிலேயரது மக்கள் கணக்கு அறிக்கை, லெப்பைகள் பற்றிக் குறிப்பிடும்பொழுது, அவர்கள் தஞ்சை, மதுரை இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதானமாக வாழ்ந்து வருவதாகவும், மேற்குக்கரை முஸ்லீம், "மாப்பிள்ளைகளைப் போல இவர்களும் சோழ மண்டலக்கரை மாப்பிள்ளை" யென வருணித்துள்ளது. அராபிய இரத்தக் கலப்புடன் கூடிய மதம் மாறிய திராவிடர்களும் இந்துக்களுமான இவர்கள் சுறு சுறுப்பும், முன்னேற்ற மனப்பாங்கும் மிக்க வியாபாரிகள் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இவர்களில் பெரும்பான்மையினர் வணிகத்திலும், கொடிக்கால் விவசாயத்திலும், சிலர், நெசவு, சங்கு, முத்துக்குளித்தல், சமயப்பணி ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவிக்கிறது[1]

இந்த அரசு அறிக்கையை அடுத்து வெளி வந்துள்ள மதுரை கெஜட்டீர், "லெப்பைகள் நேர்த்தியான, உறுதியான , செயல்திறம் மிக்க மக்கள் எனறும், எந்தச் சூழ்நிலையையும் சமாளித்து நடந்து கொள்ளக்கூடியவர்கள்’’ என்றும் புகழுரை வழங்கியுள்ளது.[2] இவர்களில் பெரும்பான்மையினர் வணிகத்திலும், சிறிதளவினர் கைவினைக் கலைகள், கடல் தொழில், போன்ற துறைகளில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டை மண்டலத்தில் உள்ள வெப்பைகள் வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகளாகவும், தோல் வியாபாரிகளாகவும், சிறு தொழில் வணிகர்களாவும் அவர்களது பெண் பாலர், பாய் நெசவு தொழிலில் திறமை உள்ளவர்களாக இருப்பதாக தென் ஆற்காடு மாவட்டம் கெஜட்டீர்[3] குறிப்பிடுகிறது. வட ஆற்காடு மாவட்ட லெப்பைகள், வசதி உள்ளவர்களாகவும் திருமறைப்படி வாழ்வியலில் வாழ்வாங்கு வாழ்பவர்களாகவும்


  1. Census Repont – Govt. of India (1881–AD)
  2. Frana's W. - Madurai Gazetteer (1921)
  3. Rajaram Roa - S. Manuel of Ramnad Samasthanam (1898)p. 49