பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


8

தக்கானிகள்-பட்டாணிகள்


இதுவரை அரபு நாடுகளில் கடல்வழியாக தமிழகம் போந்த இஸ்லாமியர்களைப் பற்றிய விபரங்களைக் கண்டோம். இவர்களைப் போன்றே அரபு நாடுகளில் இருந்தும். ஆப்பிரிக்கா, அபிஸீனியா, பாரசீகம், மத்ய ஆசியா, ஆகிய பிற நாடுகளில் இருந்தும், கடல் வழியாகவும், நிலம் வழியாகவும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்குள் புகுந்து குடியேறியவர்களும் உண்டு. குறிப்பாக சிந்து, குஜராத், மராட்டம், உத்தரப் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் படையெடுப்புகளின் மூலமும் சமயப் பணியின் நிமித்தமும், இஸ்லாமியர் வந்து தங்கி, இந்தியப் பெண்களை மணந்து நிலைத்து நின்றனர்.[1] அரேபியாவில் இருந்து சமயப் பிரச்சாரம் செய்வதற்காக ஹிஜிரி 160ல் அல் அஸதி அல்பஸ்ரி வந்து சிந்துவில் தங்கினர். கி.பி. 1067 ல் யமன் நாட்டில் இருந்து போரா முஸ்லீம்களின் தலைவரான பாபா சத்ருதீன் குஜராத்தில் தங்கி மார்க்கப்பணியில் ஈடுபட்டார். மத்ய ஆசியாவில் இருந்து வந்த புனித காஜா முயினுத்தீன் ஷிஸ்தி கி.பி. 1197 ல் ஆஜ்மீருக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டார்கள். இன்னும், சையித் ஜலாலுத்தின் புகாரி கி.பி. 1244 ல் வடநாட்டிலும், சையித் முகம்மது கேகுதரால் பதினான்காம் நூற்றாண்டில் பூனா-பெல்காம் பகுதியிலும், அதே சமயம் - கட்ச் குஜராத் பகுதியில் இமாம் ஷ வும், வந்து தங்கி சமயப்பணில் ஈடுபட்டனர். அரபுத் தளபதியான முகம்மதுபின்-காசிமின் முதலாவது இந்தியப் படையெடுப்பை (கி.பி.


  1. Eswari Prasad – A. Short History of Muslims Rule in India (1939) р. 37