பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவர்களைக் குறிக்க எழுந்த சொல் போலத் தோற்றுகிறது. தமிழ்நாட்டின் வணிக குலமான ஆயிர வைசியரில் சிலர் கூட, இந்தப் பெயரினால் பட்டாணிச் செட்டியார் என அழைக்கப்படுகின்றனர். மேலும் இன்னொரு பிரிவினரான வாணியச் செட்டியார் குலத்திலும் “பட்டாணி” என்ற பெயர் இணைத்து வழங்கப்படுகிறது. இவர்கள் காமராசர் (ராஜபாளையம்) மதுரை (பெரியகுளம்) நெல்லை (கம்பங்குளம்) ஆகிய மாவட்டங்களில் தொகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குல தெய்வம் குதிரையில் அமர்ந்த வீர உருவம், கொடி பச்சை இளம் பிறைக் கொடியாகவும் இருந்து வருகிறது. மேலும் அந்த தெய்வத்தின் கோயிலை “பட்டாணி” கோவில் என வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டில் பல ஊர்களில் "பட்டாணி (வலி)" "பட்டாணி சாயபு" என்று இறை நேசர்கள் சிலரது அடக்கவிடங்களும் உள்ளன. அவைகள் இஸ்லாமியரது கபுறுஸ்தான் போன்ற வடிவில் உள்ளன.

தக்னி என்பது டெக்கானிஸ் (Deccanese) என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு, பீஜப்பூர், பீடார், பேரார், பாமினி, கோல் கொண்டா என்ற ஐந்து தக்கணப்பகுதி இஸ்லாமியத் தன்னரககளின் பணியில் இருந்து அவை சிதைந்த பிறகு தெற்கே தமிழகத்தில் குடி புகுந்தவர் என்ற கருத்தில் அவர் தம் தொன்மையை சுட்டும் சொல்லாக அமைந்துள்ளது பொருத்தமானதாகும். அவர்கள் அனைவரும் ஆற்காட்டு நவாப்புகளின் ஆட்சியில், அரசியல் சலுகைகளும், வாழ்க்கை வசதிகளும், பெற்று பயனடைந்தவர்கள். ஆனால், கால மாறுதலினால் இவர்களில் பெரும்பாலோர் பொருளாதார வீழ்ச்சியுற்து தோல் பதனிடும், பிடி, சுருட்டு. ரொட்டி தயாரித்தல் போன்ற சிறு தொழில்களிலும் விவசாயத்திலும் காவல் துறை போன்ற அரசுப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களும், இன்றைய தமிழ்ச் சமுதாயம் என்ற பேரணியில் உள்ள சிறுபான்மையினராக, தமிழக இஸ்லாமியர் என்ற சிறுபிரிவிற்குள் அடங்கியவர்கள். அவர்களது தாய் மொழி, தமிழ் - உருது என வேறுபட்டு இருந்தாலும், இவர்கள் அனைவரையும் தமிழ்நாடு அரசு, கல்வி, பொருளாதார நிலைகளில் பின்னடைந்துள்ள "பிற்பட்டவர்" என பாகுபாடு செய்துள்ளது.[1] தமிழக இசுலாமியர் என்ற பெருநட்டத்தில் இவர்களும் அடங்கியவராவர்.


  1. G.o. Ms. No. 1298 (Pub) 17-12-1975