பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தக் குழுவில் சையத் அலியார் ஷா என்ற இறைநேசரும் இருந்தார் எனத் தெரிகிறது.[1] மாலிக்-உல்-முல்க் அப்பொழுது மதுரை ஆளுநராக இருந்தார் என மதுரைச் சீமை வரலாற்று ஆசிரியர் வரைந்துள்ளார்.[2] அந்தப் புனிதரைப்பற்றி வேறு தடயங்கள் எதுவும் இல்லை.

மற்றும், கி.பி. 1182இல் மதினத்திலிருந்து பாண்டியநாடு போந்த சுல்தான் ஸையது இபுராகிம் (வலி) அவர்கள் தங்களது பணியை நெல்லை மாவட்டத்தில் தொடங்கினார்கள். அப்பொழுது பாண்டிய நாடு மூன்று பகுதிகளாக மூன்று பாண்டிய மன்னர்களது ஆட்சியில் அமைந்து இருந்தது. காயலைக்கோ நகராகக் கொண்டு குலசேகர பாண்டியனும், மதுரையில் திருப் பாண்டியனும் கிழக்குச் சீமை பவுத்திர மாணக்கப்பட்டினத்தில் விக்ரம பாண்டியனுமாக மூவர் ஆட்சி பீடங்களில் இருந்தனர் பாண்டியர்களிடையே பட்டத்திற்குரியவர் மட்டு மல்லாது, இளவல்களும், பேரரசர்களுக்குச் சமமாக அரசியல் சம்பிரதாயங்களுடன் பல பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பைக் கவனித்து வரும் பழக்கம் அப்போது பாண்டிய நாட்டில் இருந்தது. இவ்விதம் ஐவர் பாண்டியநாட்டை ஆட்சி செய்ததையும் இதனால் பாண்டியர்களுக்கு பஞ்சவர் என்ற பெயர் இருந்ததையும் இலக்கியங்களில் காணப்படுகின்றன.[3] சமுதாய வளர்ச்சிக்கு உதவுவதற்காக, அரசியல் அதிகாரங்களைப் பரவலாக்கும் வகையில் இந்த முறை, கடைபிடிக்கப்பட்டு இருந்தாலும் பாண்டியர்களிடையே போட்டியும் பொறாமையும் வளர்ந்ததைத்தான் வரலாறு காட்டுகிறது.

சுல்தான் ஸையது இபுராகீம் (வலி) அவர்களும் அவர்களது திரளான தொண்டர்களும் தமிழகப் பயணத்தை மேற் கொண்டிருப்பது, ஏக தெய்வ வணக்கத்தையும் இறைவனது சன்மார்க்


  1. Appadorai Dr. A. Economic Conditions of South Indian(194O) vol. II p. 22
  2. Alexander Nelson - manual of Madura Country (1868)
  3. ஜெயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி - பாடல் 382. “ விட்ட தண்டினின் பினவர் ஐவரும் கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலும் நீ"