பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69



கள்.[1] தமிழகத்தில், ஷஹீது அவர்கள் மிகவும் குறுகிய கால வாழ்ந்த பொழுதிலும், அவர்களது தொண்டும் அரசியலும் தமிழ் மக்களையும் பிற்கால தமிழக ஆட்சியாளர்களையும், மிகவும் கவர்ந்து விட்டன. அதன் விளைவு தமிழகத்தில் இஸ்லாம் பரவுவதற்கு நல்ல வாய்ப்பும் சூழ்நிலையும் ஏற்பட்டன. மத மாற்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, இஸ்லாமியர் அல்லாதவரும் ஷஉறீது அவர்களை, ஆத்ம சுகம் வழங்கக்கூடிய ஞான குருவகக்கருதி காலமெல்லாம் போற்றி வருகின்றனர். இதனை அடுத்து இஸ்லாமியத் தலைவர்களை தங்களது ஆட்சிக்கு அரண் செய்யும் அமைச்சர்களாக, தளபதிகளாக, அரசியல் தூதுவர்களாக வரித்துக் கொள்ளும் வாய்ப்பும் தமிழகத்தில் வலுப்பெற்றன.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் சோழப் பேரசின் வீழச்சிக்கு கோடிட்டது. பராந்தக சோழன் முதல், மூன்றாம் குலோத்துங்கன் வரையான சோழ மன்னர்கள்-இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக பாண்டியர்களுக்கிழைத்த பெரும் பழியை நீக்கினான் முதலாவது மாறவர்மன் சந்தரபாண்டியன் (கி.பி. 1216-38) இவனது ஆட்சிக்காலத்தில் பாண்டியப் பேரரசி வடக்கே வாரங்கல் நாட்டிலிருந்து தெற்கே திருவிதாங்கூர் வரை பரவியது. இதனுடைய வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் குதிரைப்படை இன்றியமையாததாக இருந்ததால் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் குதிரைகள் ஆயிரக்கணக்கில் தரவழைக்கப்பட்டன. அதே மன்னனது ஆட்சிக்காலத்தில் சீனத்தில் இருந்து இலங்கை வழியாக, பாண்டிய நாடு போந்த உலகப் பயணி மார்கோ போலோவின் பயணக் குறிப்புகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.[2]


  1. வண்ணக்களஞ்சியப் புலவர் – தீனெறி விளக்கம் (1898)
  2. Marcobolo — vol II. p. 324