பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அவ்விதம் தரவழைக்கப்பட்ட குதிரை ஒன்றில் கிரயத்தொகை 220தினர் பொன்னாகும். பயணத்தின் பொழுது இந்தக் குதிரைகளுக்கு காயம் ஏற்பட்டாலும், சாவு சம்பவித்தாலும், அதற்கான கிரையத்தை பாண்டியனது கருவூலத்திலிருந்து வழங்கப்பட வேண்டும் என்பது தான் ஒப்பந்த நிபந்தனை, பொதுவாக இந்தக் குதிரைகள், இந்து அற நிலயங்கள், ஆலயங்களுக்கு நிறுவப்பட்ட அறக்கொடைச் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் மேலதிக வருமானம் தொகையினின்றும், அந்தச் சொத்துக்களை சார்ந்தோர் செலுத்தும் இறைகளில் இருந்தும் வாங்கப்பட்டன. அரசாங்கத்தின் செலவில் இந்த இனம் சேர்க்கப்படவில்லை.[1]

இந்தக் குதிரை ஒன்று ஐநூறு தினார் பொன் வீதம் வாங்கப்பட்டதாக உலகப் பயணி மார்க்கோ போல வரைந்துள்ளார். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டிற்கு வந்த அந்தப் பயணி காயலுக்கு வருகை தந்தார். அங்குள்ள பாண்டிய மன்னருக்கு நான்கு சகோதரர்கள் இருந்ததாகவும், அவர்களும் பாண்டிய நாட்டில் பல பகுதிகளில் ஆட்சி புரிந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர் காயல் மன்னன் தமது சகோதரர்களைப் பொன்றே வருடந்தோறும், 2000க்கு அதிகமான குதிரைகளை வாங்கினார் என்றும் வரைந்துளளார். ஆனால் வருட முடிவில் நுாறு குதிரைகள் கூட எஞ்சி இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[2] காரணம் நிர்வாகக் குறைபாடும் குதிரைகளை அக்கரையுடன் சிறப்பாகப்பாக பராமரிக்க தவறியதும் ஆகும். குதிரைகளுக்கு இலாடம் பூட்டும் பணியாளர் கூட அப்பொழுது தமிழ்நாட்டில் இல்லை என்பதாக அவரது குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஆசிரியர் வஸ்ஸாப் சொல்லும் காரணம், . . . . . இந்தக் குதிரைகள் கரை இறக்கப்பட்டவுடன் அவைகளுக்கு பார்லி தானியத்தை அப்படியே கொடுப்பதற்குப் பதிலாக அதனை வறுத்து தயிருடன் சேர்த்துக் கொடுத்தனர், சூடான பசும்பாலும் கொடுத்தனர். இலாயத்தில் நாற்பது நாட்கள் கட்டிப்போட்டு அவைகளைக் கொழுக்கச் செய்தனர்.


  1. Ibid. P. 33
  2. Nilakanta Sastri — K.A. – Foreign Notices of S. India(1972) р.167