பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76



யனுக்கு உதவியதை யுவாங்ஷிங் என்ற சீன நூல் வரைந்துள்ளது.[1] இவர்களது பணியில் பாண்டியனைப் போன்று மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்டார் பேரரசர் குப்ளாய்கான். இதனால் தனது "மருமகன்" என்று பொருள்படும் "பூ-மா" என சீன மொழியில் பாண்டியனை உறவு கொண்டாடி வந்தார்.[2] இவ்விதம் சீனமும் தமிழகமும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, அன்று, நெருக்கமான, இயல்பான மனித உணர்வுகளுடன் இணைக்கப்பட்டிருந்ததை எண்ணும்பொழுது, நமது நெஞ்சம் நெகிழ்வு பெறுகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் எய்திய சாதனையை இருபதாம் நூற்றாண்டு அரசியலில் எய்த இயலவில்லை!

பாண்டிய நாட்டிலிருந்து அரசியல் தூதுக்குழுக்கள் கி.பி. 1279, 1280, 1282, 1283, 1284, 1286, 1288, 1290, 1301 மற்றும் 1314 ஆகிய ஆண்டுகளில் சினம் சென்று வந்தன.[3] கி.பி. 1301ல் சுல்தான் ஜமால்தீனது மகன் பக்ரூதீன் அகமது என்பவர் சீனம் சென்று நான்கு ஆண்டுகள் தூதுவராகப் பணியாற்றிய பின் தாயகம் திரும்பினார். வழியில், கரையை எட்டுவதற்கு இரண்டு நாட்கள் பயணத் தொலைவில், கப்பலில் இறந்து போனார், கிழக்கு இராமநாதபுரம் கடற்கரையில் சுந்தரமுடையான் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள சீனியப்பா தர்கா என்ற தலம் அவரது அடக்கவிடமாக இருக்க வேண்டுமென ஊகிக்கப்படுகிறது.[4] இவரது மைந்தர் நிஜாமுத்தின் கி.பி. 1341ல் பாண்டிய நாட்டின் கடைசித் தூதுவராக சீனத்திற்கு அனுப்பப்பட்டார். அவரது இன்னொரு மைந்தரான ஸிராஜ் தக்கியுத்தீன் பத்தனில் (பெரியபட்டினம்) பெரும் வணிகராகவும், பாண்டிய மன்னரது வணிகப் பிரதிநிதியாகவும் இருந்து வந்தார். இஸ்லாத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகிய ஜக்காத்தை(தானம்), — மொத்த இருப்புச் சொத்தின் பெறுமா


  1. Nilakanta Sastri K.A. - Foreign Notices of South India (1972) p. 150
  2. Ibid — 153
  3. Ibid — 154
  4. Krishnasamy Iyanger Dr. S.K. – South India and Her Mohammedan Invaders (1921) p. 193.