பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

சென்று தமிழகத்தில் ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய கோயில்களில் கொள்ளைப் பொருட்களுடன் கி.பி. 1311 ல் தில்லி திரும்பினான். அப்பொழுது அவனது சிறிய படையணி யொன்று மதுரையில் தளம் கொண்டிருந்தது.[1] ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம். மீண்டும் கி.பி. 1318ல், தளபதி குஸ்ராகான் தலைமையில் தில்லிப் படையொன்று தமிழகத்தை சூறையாட வந்தது. பாண்டிய நாட்டுப் பெருநகரான பத்தனி (பவித்திர மாணிக்கப்பட்டினத் தி)லிருந்து பாண்டியனும் அவனது ராஜகுருவும் பயந்து பட்டினத்தை விட்டு மறை இடங்களுக்கு ஓடினர். அப்பொழுது பாண்டியனது அமைச்சராக இருந்த பெரு வணிகர் சுல்தான் விராஜ் தக்யுதீன் மட்டும் கொள்ளைக்காரன் குஸ்ராகானுக்கு அஞ்சாமல் பத்தனில் இருந்தார். அவர் ஒரு அராபிய முஸ்லீம் என்பதைக் கூட கருதாமல் கொடியோன் குஸ்ரு அவரை கைது செய்து அவரது பெருஞ் செல்வத்தை கொள்ளை கொண்டான். பிறகு அந்தக் கல்நெஞ்சன் அவரைக் கொலை செய்து விட்டான் என வரலாற்று ஆசிரியர் சாகிருத்தீன் பர்னி குறித்துள்ளார்,[2] ஆனால் இன்னொரு வரலாற்று ஆசிரியரான அபீர் குஸ்ருவின் குறிப்புகளில் கொள்ளையன், சுல்தான் ஸிராஜுதீனது அழகிய மகளைத் தனக்கு மணமுடித்து தருமாறு கட்டாயப் படுத்தினான் எனவும், அதனால் மனமுடைந்த சுல்தானும், அவரது அழகு மகளும், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர் எனவும் வரையப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகம் வந்த பாரசீகக் கவிஞர் இஷமி, இந்த சோக நிகழ்ச்சியை ஒரு சிற்றிலக்கியமாகவே பாடியுள்ளார்.[3]

பாண்டிய நாட்டில் எழுந்த சீரழிவு, குழப்பம் ஆகியவைகளின் பின்னணியில் தமிழகம் தில்லிப் பேரரசுடன் கி.பி. 1323ல் இணைக்கப்பட்டது.[4] தில்லிப்படையின் ஒரு அணி தொடர்ந்து


  1. Srinivasa Ayyangar Dr. S. -South India and her Mohammedan Invaders (1921) p. 123
  2. Elliot and Dows son-History of India - vol. III p. 219.
  3. Futa-hu-Saltin (Madras) p. 369, 70.
  4. S.A.O. Hussaini-History of Pandya Country (1962) p. 74