பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

பட்டினம், அழகன்குளம், ஏர்வாடி ஆகிய ஊர்களில் அகழ்ந்து எடுக்கப்பட்டவை. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனையூர், ராங்கியம் ஆகிய ஊர்களில் கி.பி. 1332, 1341 களிலும் வருட ஆட்சிக்கால கல்வெட்டுக்களிலும் பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் திருக்கோலக்குடி, கண்டதேவி ஆகிய ஊர்களில் கி பி. 1358, 1368 வருட ஆட்சிக்கால நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன.[1] இவைகளைத் தவிர இந்த சுல்தான்களின் ஆட்சி விவரங்களை அறிவிக்கக்கூடிய வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை. அத்துடன் மதுரை சுல்தான்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி பற்றிய சரியான விவரங்களும் இல்லை. எனினும் சுல்தான்களது ஆட்சியை அகற்றிய குமாரகம்பணனது மனைவி கங்காதேவியின் மதுரை விஜயம்! என்ற நூலில் இருந்து, சிதம்பரத்திற்கு தெற்கே உள்ள தமிழகம் முழுவதும் மதுரைக்கு உட்பட்டு இருந்தது என்ற குறிப்பு கிடைக்கிறது.[2] சோழ மண்டலக் கரையையொட்டிய தஞ்சை, திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், திருநெல்வேலி,சீமைகளுடன் மதுரையும், தென்ஆற்காட்டில் ஒருபகுதியும் இணைந்த பகுதி என டாக்டர் ஹூசேனி கருத்து தெரிவித்து இருக்கிறார்.[3] சுல்தான் கியாஸுதீன் தமகானி ஆட்சியின் பொழுது மதுரைக்கு கி.பி. 1344ல் விஜயம் செய்த துணிவதிய நாட்டுப் பயணியான இபுனு பதூதாவின் பயணக் குறிப்புகள் ஒரு சில விவரங்களைத் தருகின்றன. மதுரை சுல்தான் ஈவு இரக்கம் இல்லாமல் தனது எதிரிகளை அழித்து ஒழித்த கொடுஞ் செயல்கள், கண்ணனூர் கொப்பம்போர், அங்கு சிறைபிடிக்கப் பட்ட ஹொய்சள நாட்டு மன்னன் (வீர பல்லாளா) கொல்லப்பட்டது. தில்லிநகர அமைப்பில் மதுரை நகரம் அமைக்கப்பட்டு இருப்பது ஆகியவை பற்றிய விபரங்கள் அவை.

சிறிது காலம் கழித்து இபுனு பதூதா மீண்டும் பத்தனுக்கு வந்து அங்கிருந்து ஏமன் நாட்டிற்குப் புறப்பட்டுக் கொண்


  1. Krishnaswamy Ayyangar South India and Her. Mohammedan Invaders 225-229.
  2. Journal of Madras University -Vol XI No : 1 P.56
  3. Hussaini Dr. S.A.O - History of Pandiya Country (1962) P. 194.