பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

டிருந்த எட்டுக் கப்பல்களில் ஒன்றில் பயணமாகி கொல்லம் போய்ச் சேர்ந்தார், என்றாலும் இந்த சுல்தான்களின் ஆட்சி, தமிழகத்தில் எந்தவிதமான புதிய சாதனையும் ஏற்படுத்த இயலவில்லை என்பதை மட்டும் ஊகிக்க முடிகிறது. அன்றைய கால கட்டத்தில் தமிழக அரசியலில் நிலவிய பிரிவினை சக்திகளின் ஒரு அங்கமாகவே தனிமையுற்று அந்த ஆட்சி தோற்றமளித்தது. காரணம் மதுரை அரசை எந்த சந்தர்ப்பத்திலும் கைப்பற்றி தங்கள் அரசுடன் இணைப்பதற்கு மதுரை சுல்தான்களின் எதிரிகள் தயாராக இருந்தனர். வடக்கே தொண்டை மண்டலத்தை ஆண்ட ராஜ கம்பீரச் சம்புவரயர்கள், வடமேற்கே கொப்பத்தையும் அடுத்து திருவண்ணாமலையும் கோநகர்களாகக் கொண்டு ஆட்சி செய்த ஹொய்சாள மன்னர்கள். திருவிதாங்ரில் ஆட்சி செய்த மன்னர் ரவிவர்ம குலசேகரன் ஆகியோர் மற்றும் ஆங்காங்கு சில பகுதிகளில் ஆட்சி செய்த பாண்டிய இளவல்கள் இவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி "இந்து ராஜ்யம்" என்ற சமயப் பூச்சில் தென்னகம் முழுவதையும் ஆந்திர ஆதிக்கத்தில் கொண்டு வர முயன்றான் குமார கம்பண்ணன். இந்த இக்கட்டான சூழ்நிலையை, மதுரயிைல் மலர்ந்த இசுலாமியரின் புரட்சி அரசு, சமாளித்து நின்றது. கி. பி. 1342ல் மதுரை சுல்தான் மூன்றாவது விரபல்லாளனைக் கொப்பம் போரில் முறியடித்தார். [1]தெற்கே தனது கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த குமார கம்பண்ணன் ஹொய்சாள அரசு வீழ்ச்சியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தொண்டை நாட்டு சம்புவரையர்களை கி.பி. 1347ல் வென்றான். அடுத்து அவனது படைகள் குழப்பத்திலிருந்த தமிழகத்தை ஊடுருவி சேது மூலம் வரை சென்று திரும்பின. இந்தப் படையெடுப்பிற்கான நியாயத்தை அவனது மனைவி கங்காதேவி ஸமஸ்கிருதத்தில் எழுதிய கம்பராயன சரித்திரம் அல்லது "மதுரை விஜயம்" என்ற கற்பனைக் காவியத்தில் குறிப்பிடுகின்றார்.[2]

பாண்டிய நாட்டு ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெறவில்லை. தாம்பிரபரணி ஆறு, பசுக்களின் இரத்தஆறாக ஓடி


  1. Krishnasami Iyangar Dr. S — South India and her Mohammedan Invaders (1921) PP 167, 168.
  2. Madura Vijayam (Annamalai University Publication) 1957