பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

யுள்ளனர் என்றே முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது. அவர்களது ஆட்சி, விபச்சாரம், பாதகங்கள், கொள்ளை, கொடுமைகள், கொலைகள், பொது மக்களுக்கு எதிரான செயல்களின் பட்டியலாக இழி செயல்களின் பதிவுகளுமாக இருந்தது. அர்ச்சகர்களுக்கும் ஆலயங்களுக்கும் அன்பளிப்புகளை வழங்கியதின் மூலம் அவர்களுக்கு சாதகமாக விளம்பரம் செய்யுமாறு செய்து பொதுமக்களை அவர்களது அக்கிரம ஆட்சியில் வாயடைத்துப் போகுமாறு செய்தனர்”. என தமது திருநெல்வேலி சீமை வரலாற்றில் கருத்து தெரிவித்துள்ளார்.[1]

இந்தகாலக்கட்டத்தில் வடுகர் ஆந்திரமாநிலத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் பெயர்ந்து வந்தனர். தமிழகத்தில் வேலூர், செஞ்சி, தஞ்சை மதுரை நாயக்க அரசுப்பகுதியில் நிலையாகக் குடியேறினர். ஆங்காங்கு அவர்களுக்கு பாளையப்பட்டுக்களில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மிகவும் சிறுபான்மையரான அவர்களுக்கு சிறப்பான சலுகைகள் அளிக்கப்பட்டன அரசுப் பணிகளிலும் தலைமைப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. மொழி, கலை, பண்பாடு, இனம் ஆகியவைகளில் தம்மோடு இணக்கமுள்ள குடிகளுக்கு அந்த அரசு அரசியல் ஊக்குவிப்புகள் அளித்தது இயல்புதான்! ஆனால், எந்தக்குடி மக்களது நலனுக்காக கோலோச்சியதாக பெருமைப்பட்டார்களோ அந்தக் குடிமக்களது, தமிழர்களது மொழி, கலை ஆகிய முன்னேற்றத்திற்கு எவ்வித முனைப்பும் கொள்ளவில்லை என்பது வரலாறு, அவர்களது ஆட்சிக்காலங்கள் கி.பி. 1736 வரை இந்த அரசர்களது அவையில் எந்த தமிழ்ப்புலவர்களும் பாராட்டப்படவில்லை. இந்த நெஞ்சை நெருடும் நிலையை, "கனத்த சிராப்பள்ளிதனில் வடுகர் கூத்து கட்டியாளுவதாச்சு, தஞ்சாவூரோ, முனைத்த மராட்டிய காடு மிஞ்சிப் போச்சு ... ...” என்ற தனிப்பாடல் தெளிவாகச் சுட்டுகிறது.


  1. Caldwell Fr. — Political and Physical History of Tirunelveli Dist.