பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


13

நாயக்கரது நேயம்

 

நாயக்கர்களது ஆட்சியில் தமிழக இஸ்லாமியர்களது பங்கு அரசியலில் மிகவும் குறைவு. வடக்கே இருந்த பாமினி சுல்தான்களுக்கும் நாயக்கர்களுக்கும் கடுமையான பகை உணர்வுகள் நிலவி வந்தபொழுதும் தமிழக அரசியலில் அதன் பிரதிபலிப்புகள் இல்லையென்றும் அளவிற்கு அமைதியான போக்கு காணப்பட்டது. நாயக்கர்களது படைப்பிரிவுகளில் தமிழக இஸ்லாமியர்கள், படை வீரர்களாகவும், பொறுப்புள்ள பணிகளிலும் சேவை செய்தனர். அதன் காரணமாக இராமராயர் போன்ற நாயக்க மன்னர்கள், இஸ்லாமியர்களது மத உணர்வுகளை மதித்துப் போற்றிய சம்பவங்கள் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன. மன்னருக்கு ராஜ விசுவாசம் தெரிவித்தல் போன்ற நிகழ்ச்சிகளிலுங்கூட, இஸ்லாமியர்கள் அரசருக்கு முன்னே வந்து தலை தாழ்த்தி அடிபணித்து விசுவாசப் பிரமாணம் செய்வதற்குப் பதிலாக அவர்களது திருமறையான திருக்குர்ஆன் முன்னதாக விசுவாசப் பிரமானம் எடுத்துக் கொண்டால் போதும் என நாயக்க மன்னர் ஆணை பிறப்பித்து இருந்ததாகத் தெரிகிறது.[1] மதுரை, திருச்சி, தஞ்சை போன்ற புகழ் வாய்ந்த கோட்டைகளில் முழுப் பொறுப்பு (கிலேதார் பதவி) இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டிருந்தது. மேலும், முக்கியமான படைப்பிரிவுகளையும் இஸ்லாமியர் இயக்கி வந்தனர். கி.பி. 1639ல் திருமலை மன்னர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரை செயித்துவர தனது தளபதி இராம்ப்பையன் தலைமையில் பெரும் படையணியை அனுப்பி வைத்தார். அந்தப் படையெடுப்பில் வர்ணனையை படிக்கும்பொழுது


  1. Sthianathair - History of Madurai Nayaks-Chap. 2 p. 353