பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஆஸ்தானபுரம் நாடக ச்பை (அங்கம் 1 சிங்கமும், நெலவும் வருகின்றன. மாது சிரோமணிகளே மனமிளகிய நார்மணிகளே! பயங்கரமான சிறிய தரையினில் ஒடும் பெரிய சுண்டெலியினைக்கண்டு சும்மா பயந்திடும்-சீமாட்டிகளே! அங்கமெல்லாம் நடுங்கிட கர்ஜிக்கும் சிங்கத்தின் சப்தத்தினைக் கேட்டு ஒருகால் நீங்கள் பயப்படாதபடி இதைச் சொல்கிறேன். இப்படிஎன் மேலிருப்பது சிங்கத்தின் தலை இதை வாங்கினேன் கொடுத்து அதிக விலை! சிங்கமல்ல எனக்கு அச்சன் நான் சிசுநாகத் தச்சன்! வாஸ்தவமாக வந்தால் சிங்கமாய் என் உயிர் உடனே போம் பங்கமாய்! இந்த சிங்கம் மிகவும் சாதுவான ஐந்து-பழிபாவத் திற்கு மிகவும் அஞ்சுவது! தைரியத்தில் இந்த அரி-நரிதான். குள்ளநரிக்கு-உள்ள தைரிய முடையது-அதிருக் கட்டும்-இனி நிலவு சொல்வதைக் கேட்போம். இந்த விளக்கானது சந்திரபிம்பம் நான் அந்த சந்திரனத் தாங்கும் கம்பம். அப்படியால்ை இவன்தான் பரமசிவம்-ஆல்ை இந்த விளக்காகிய சந்திரனேத் தலையில் தரிக்கவேண்டும்கையில் தரிக்கலாகாது. அந்த விளக்கிலிருக்கும் மெழுகுவத்தி உருகி அவன் தலையில் விழுந்தால் என்ன செய்வான் பாவம்! இந்த சந்திரனைப் பார்க்க என்மனம் பிடிக்கவில்லைஇவனைச் சீக்கிரம் போகச் சொல்லுங்கள்.