பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 3) சங்கீதப் பயித்தியம் 65 மூன்ரும் காட்சி இடம்-பரசுராமன் வீட்டின் உள்புறம். தெருக்கதவு உள் தாப்பாள் இடப்பட் டிருக்கிறது. ஒருபுறமாக பரசுராமன் உட்கார்ந்து சரஸ்வதி படத்திற்குப் பூஜை செய்து கொண்டிருக்கிருன். காந்தாரி உள் அறையில் சமையல் செய்கிருள். LIIT. அடி - கா ந்தார்!-உம்-தேவகாந்தாரி 2 காங். (அறையிலிருந்து வருகிருள்) ஏன்! கூப்பிட்டைங்களே. பர. சமய லாச்சோ ? காங். இதோ ஆயிபோச்சி-ஒரு கொடியிலே-யூஜெ பண் ணும் போதுகூட சாப்பாட்டு கியாபகம் தான! பர. இல்லெடி, ரொம்ப பசியாயிருக்குது. காங், பூஜெ பண்ணும்போது மனசெ அடக்கவாணுமா - ஏதாவது ஸ்தோத்திரமா பாடிகினு பூஜபண்ணுசரியாபோவும். . . பர. ஸ்தோத்திரப்பாட்டு தமிழ்லே எனக்கு ஒண்னும் தெரியாதே. காந், ஒன்னுமா தெரியாது ஏதாவது தெரிஞ்சபாட்டா ப்ாடுங்களேன்-சாதத்தெ வடிச்சூட்டு வர்ரேன். (உள்ளே போகிருள்.) பர. என்னடா கஷ்டமாயிருக்குது எனக்கென்ன தமிழ் பாட்டு தெரியும் ! ஒண்னுதான் கியாபகம் இருக்குது. . (படுகிருர்) ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் -என் அம்மணி தாயே! சரஸ்வதி! மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோ டிணங்கவேண்டாம் (தவடையில் போட்டுக்கொண்டு) -பூலோக சுந்தரி கைலாசவாசி! காங், மறுபடியும் உள்ளிருந்துவந்து இது என்ன பாட்டு இது போதும் நிறுத்துங்க யாராவதுபாத்தா சிரிக்கப் போரா-அதோ ஏதோ கதவண்டை சத்தம் கேட் டுது, என்னுண்னு பாருங்க. -