பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நா. பார்த்தசாரதி மாய்த் தெளிந்த நீர்ப்பரப்பு அகன்ற தாமரைக் குளமும் தேரடியுமாகப் பரம்பரையான தமிழ்நாட்டுச் சிற்றுரின் சாமுத்திரிகா லட்சணங்களை எல்லாம் முதற் பார்வை யிலேயே பெற்றிருந்தது. தேரடிக்கு அருகே கோவில் நந்தவனத்துக்கு அப்பால் பெரிய தென்னந்தோப்பின் நடுவே மதிற் சுவருக்குள்ளாக ஜமீன் அரண்மனைகள் இருந்தன. .

மதிற்கவருக்கு வெளியே இருந்த நகரப் பகுதிக்கு வெளிப்பட்டணம் என்றும் உள்ளே இ ரு ந் த நகரப் பகுதிக்கு-அதாவது-அரண்மனை-அதன் அங்கமான வர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு உள் பட்டணம் என்றும் பெயர்கள் ஏற்பட்டு நிலைத்திருந்தன. வெளிப்பட்டணத்து வீதிகள் தெருக்கள் எல்லாம் கோவிலுக்கு இப்பால் அளவா கவும் அழகாகவும் கட்டமைப்போடும் தொடங்கின. தெரு வீடுகள் கோணல் மாணலின்றி நூல் பிடித்த மாதிரி இருந் தன. உள்பட்டணத்தையும், வெளிப்பட்டணத்தையும், கோவிலும் தேரடியும் குளமும் நடுவே இருந்து தனித் தனியே பிரித்தன. தேரடியில் இரண்டு பிரும்மாண்டமான கருங்கல்பாறைகளுக்கு நடுவில் இயற்கைக் குகைபோல் அமைந்திருந்த ஒரு பிளவில் பாறையோடு பாறையாகச் செதுக்கப்பட்டிருந்த அநுமார் நகரின் காவற் கடவுளா கவும் சக்திவாய்ந்த வரப்பிரசாதியாகவும் புகழ் பெற்றிருந் தார். அந்தக் குகையில் கோயில் தோன்றிய காலத்திலி ருந்து அணையாமல் எரியும் வெண்கல அகண்ட விளக்கு ஒன்று இருந்தது. புயலானாலும் மழையானாலும் வெள்ள மானாலும் இந்த அகண்ட விளக்கு மட்டும் அணைந்ததே யில்லை என்று ஊரில் பெருமையோடும் கர்வத்தோடும் கூறிக்கொள்வார்கள். கதவும் பூட்டும் இல்லாத இந்த மாபெரும் பாறை அநுமார் தான் ஜமீனை ஆளும் வம்சா வளியினரான உடையார்களின் குலதெய்வம்.

அங்கே ஒவ்வொரு ஜமீன்தாருக்கும் முறைப்படி மனந்த பட்டித்து ராணியின் வாரிசுகளைத் தவிர மற்ற