பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நா. பார்த்தசாரதி

னால், உடனே செய்ய முடியும் என்ற நம்பிக்கை இப் போது அவனுக்கு வந்திருந்தது. தனக்குப் பிடித்தமான அழகியிடம் போட்டி ஆளாக வந்து தொல்லை கொடுத்த இடையூறு தொலைந்தது என்கிற திருப்தியோடுபோட்டித் தயாரிப்பாளர், டைரக்டர் ஒருவரைத் தீர்த்துக்கட்டி விட் டோம் என்ற நிம்மதியும் இன்று இருந்தது. என்ன கார னத்தாலோ அந்த ஆளின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கும் போது எழிலிருப்பு உள்பட்டணம் ஜமீன் வகை யற ஆட்களை நினைத்துக் கொண்டான் திருமலை. வைரம் பாய்ந்த அந்தப் பழைய விரோதத்தை எண்ணி யதுமே கொலைக்குச் சங்கல்பம் செய்து கொண்டது போல் ஓர் உறுதி கிடைத்தது. தனது தற்காலிக விரோதிகளைத் தொலைக்கப் போதுமான மனஉறுதி பெறுவதற்காக நிரந்தர விரோதிகளை அடிக்கடி நினைக்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு வெறுப்பிலும், துவேஷத் திலுமே அவ ன் வளர்ந்திருந்தான். வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவனது அரசியல் உருவாயிற்று. வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவனது வெற்றிகளும், பொருளாதார, புகழ் வசதிகளும் உறுதிப் படுத்தப் பெற்றன. இது நாளடைவில் அவனை ஒரு லாடிஸ்ட் ஆக்கியிருந்தது. பிறரைத் துன்புறுத்தி மகிழவேண்டிய மனநிலைக்கு அவன் வந்திருந்தான். அது தவறில்லை என்று அவனே நம்பினான். அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் இயக்கமும், அதன் தலைமையும் அவனைக் கைவிடுவதற்கு ஒருபோதும் தயாராயில்லை. அவனது செல்வாக்கு இயக்கத்தில் நாளுக்கு நாள் ஓங்கியபடி யிருந்தது., - - - - . 16

பரஸ்பரம் ஒருவர் இரகசியத்தை மற்றவர் காப்பது என்ற அடிப்படையில் அந்த அழகிய இளம் நடிகையும் அவளது தந்தை வயதுள்ள திருமலையும் ஒருவரையொரு