பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 3.05

வர் மணந்து கொண்டனர். சண்பகம் இறந்திருந்தது: வசதியாகப் போயிற்று. அவளது வருமானத்துக்கும் அவனே அதிபதியானசன். மார்க்கெட்டில் பு மு. ம் செல்வாக்கும் உள்ள ஒரு பெரிய நடிகைக்கு அவனே உரிமையாளனானான். அவளைப் படத்துக்குப் புக் செய் கிறவர்கள், பிளாக்கிலும், ஒயிட்டிலும் பணம் கொடுக் சிறவர்கள் எல்லோருமே திருமலையை முதலில் சந்தித் தாக வேண்டியிருந்தது. திருஉலை அவளுக்கும் ஆகள்: செல்வத்துக்கும், அழகிற்கும் சேர்த்தே எஜமானன் ஆனான். அவனுடைய இந்தப் புதிய பதவிகள் கட்சியில் அவன் செல்வாக்கை அதிகமாக்கின. இயக்க மூலவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடமாக அவள் வீட்டுத் தோட்டமும், சி. அறையும் பயன்பட்டன. அடிக்கடி அங்கே நல்ல விருந்து சமைத்துப் போடப்பட்டது. தலைவருக்கும். மற்றப் பிரமுகர்களுக்கும் தேவையானபோது கார்கள் உபயோகத்துக்குத் தரப்பட்டன. திருவின் செல்வாக்கு மட்டுமின்றிக் கவர்ச்சியும் அதிகமாயிருந்தது. இன்ன நடிகையின் புதுக்கணவர் என்று பெயர் பரவி அதனாலும் அவனைப் பார்ப்பதற்கு எங்கும் ஒரு கூட்டம் கூடியது. . அதனால் அவனுக்கே ஒரு நட்சத்திர அந்தஸ்து வந்திருந் தது. ஒரு சூப்பர் ஸ்டாரின் கணவன் என்றால் சும்மாவா? அவன் சில்க் ஜிப்பா, பட்டு வேட்டி, வைர மோதிரம், இண்டிமேட் செண்ட் வாசனை எல்லாம் சூழ வந்தாலே ஒரு களை கட்டியது. சினிமாப் பத்திரிகைகளில் எல்லாம் அவனைப் பற்றிய கிசுகிசு, தகவல் செய்தி, துணுக்குகள் அதிகமாக வெளிவரத் தொடங்கின. முன்பு இருந்தது போல் இயக்கத்தில் இதையெல்லாம் எதிர்க்கவோ தடுக் இவோ ஆட்கள் யாருமில்லை. கட்சிக்குள் ஈர்க்கப்பட்ட பெருவாரியான ஆட்களே இப்போது அவனால்தான் ஈர்க்கப்பட்டனர். சினிமாவுக்குக் கதை எழுத, வசனம் எழுத, பாடல் எழுத, நடிக்க, ஏரியா விநியோக உரிமை யைப் பெற என்று விதம் இதமானவாகள் இவன் சிபாரிசை நாடி வந்தனர். அவனை மதித்துக் கைகட்டி நின்றனர்.