பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் i{}7

ஆட்சி திணறியது. தொடங்கி வைத்தவர்களே எதிர் பாராத அளவு நாட்டில் தீப்பற்றிஇருத்தது. மொழிப்பற்று மட்டும் இன்றி, விலைவாசி எதிர்ப்பு, சுதந்திரம் பெற்றதி லிருந்து விடாமல் ஆட்சியை நடத்தி வந்த ஒரு கட்சியின் மேல் ஏற்பட்ட சலிப்பு, எல்லாமாகச் சேர்ந்து கொண்டன. இந்தி.எதிர்ப்புப் போரின் போது அவன் பம்பரமாக அலைய வேண்டி இருந்தது. பல இளைஞர்கள் தீக்குளித்தார்கள். ஒருநாள் மாலை பள்ளி ஒன்றின் முகப்பில் பஸ்ஸுக் குப் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்று கொண்டிருந்த மாணவர் கும்பலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பக்கத்துக் குப்பத்தைச் சேர்ந்த பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் மாட்டிக் கொண்டு இறந்து போனான். அவன் இயக்கத்தைச் சேர்ந்த குடும்பத்துச் சிறுவனா, படிக்கிற பையனா, போராட்டத்தில் ஈடுபட்டுத் துப்பர்க் கிப் பிரயோகத்தில் மாண்டானா, கலவரத்தை வேடிக்கை பார்க்க வந்து நடுவில் சிக்கிக் கொண்டு மாண்டானா , என்றெல்லாம் விவரங்கள் தெரியாவிட்டாலும் அந்த இளம் சாவை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான் திருமலை. r

'புறநானூற்றுத் தாய் போருக்கு அனுப்பிய சிறுவனை அன்று கண்டோம். இந்தியை எதிர்த்துப் புதிய புறநானூறு படைத்தான் இவன்' என்று எழுதி இயக்கத் தினசரிகளில் சிறுவனின் படத்தைப் பிரசுரித்து வெளிவரச் ச்ெய்தான் திருமலை, -

இயக்கத்தைச் சாராத தினசரிகளும் பத்திரிகைகளும் கூட இந்தச் செய்தியைப் பற்றி மிகவும் அக்கறை காட்டி வெளியிட்டன. மூளை சிதறி மாண்ட பச்சிளம் பாலகன்: என்றுகூட மிகவும் சென்சேஷனலாக இதை ஒருபத்திரிகை வெளியிட்டது. சிறுவனின் மரணம் அதை வெளியிட்ட முறை எல்லாமாகச் சேர்ந்து இந்தி எதிர்ப்புப் போரை நடத்திக் கொண்டிருந்த இளந்தல்ைமுறையினர் மேல் பொது மக்களின் அனுதாபம் திரும்பத்துணை செய்தது.