பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 115.

அதற்காகக் கோபித்துக் கொள்ளக் கூடும் என்றும் பயமாக இருந்தது. வாயிற்புறத்து விளக்கைப் பேர்ட்டு அந்த விளக்கு வெளிச்சத்தில் நின்றபடியே அவன் கொடுத்த கடிதங்களைப் படித்து விவரம் சொன்னாள் ஆசிரியரின் மனைவி. இதை வச்சுக்குங்கம்மா; நான் அப்புறமா அந்து பார்க்கிறேன்னு அவரு வந்ததும் சொல்லுங்க"-என்று ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான் திரு. முதலில் அந்தப் பெண் அதை வாங்கத் தயங்கினாள். அவன் மீண்டும் வற்புறுத்தவே அக்கம் பக்கம் பார்த்து. விட்டு மிரட்சியோடு அதை வாங்கிக் கொண்டான். திருமலை குழம்பிய மனத்தோடு திரும்பினான். கடிதங் களிலிருந்து கிடைத்த சில வாக்கியங்கள் அவனை எச்சரித் தன. நீ எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிப் பயந்து உன் வாழ்க்கையையும், அளவற்ற வருமானத்தையும் ஓர் அரவ வாடுவுக்காக வீணடித்துக் கொண்டிருக்கப் போகி றாய்? ஒரு நல்ல கிரிமினல் வக்கீலை எனக்குத் தெரியும். கோர்ட், கேஸ் என்று வந்தால் கூட உன் முன்னிலையில் அவன்தான் கொலையைச் செய்தான் என்று நிரூபித்து விட முடியும்.-என்பதாக ஒரு கடிதத்திலும், வக்கீலைச் சந்தித்துக் கேஸ் விஷயமாகப் பேசியதாக மற்றொரு கடிதத்திலும், விரைவில் அதே வக்கீலுடன் சென்னை புறப்பட்டு வரப் போவதாக இன்னொரு கடிதத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது மூன்று கடிதங்களிலுமே எழுதிய வர் விலாசம் ஒன்றாகவே இருந்தது. குப்பையசெட்டி. யார்ன் மெர்ச்சன்ட், சாயிநகர் எக்ஸ்டென்ஷன்-ஹைதரா

காத்-இப்போது அவள் ஹைதராபாத்தான் போயிருக். கிறாள் என்பதும் நினைவுக்கு வந்தது. தங்கமுட்டையிடும் விலைமதிப்பற்ற பறவை தன் கைவசமிருந்து பறந்து போய் விடுமோ என்று அவனுள் கவலை பிறந்து அரிக்க ஆரம்பித்தது. அவள் முன்னிலையிலேயே தான் கொலை

செய்தது போன்ற பரம் இரகசியங்களை எல்லாம் பிறன் ஒருவனிடம் அவள் கலந்து பேசியிருக்கிறர்ள் என்பதே. ப்ொறுத்துக் கொள்ள முடியாத குற்றிமாயிருந்தது. -