பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118. - நா. பார்த்தசாரதி

18

நீண்ட நாட்களாக் ஆட்சியில் இருந்து விட்ட காங் கிரஸை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் இயக்க ம், இயக்கக் கூட்டணியும் அந்தக் கூட்டணியின் 母 ಘೀ ੇ ಔāś 蠶 கத்தின் பகுதிகளில் இந்தியை எதிர்த்தும், இயக்கத்தை ஆதரித்தும் உடலில் மண்ணெண்ணையை அல்லது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு பலர் தீக்குளித்திருந் தார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்திருந் தார்கள் . இவையெல்லாம் சேர்தது அனுதாபத்தை இவர் கள் பக்கம் ஈர்த்திருந்தன. திருமலை தனது தேர்தல் தொகுதியாகிய எழிலிருப்பிலேயே வந்து தங்கி வேலை செய்தான். முன்பு ஒரு தேர்தலில் மேல்தட்டு மக்களை ஈர்ப்பதற்கு வித்தகர்.வேணு கோபாலனார் பாராட்டு விழா'- என்று நடத்தியது போல் இப்போது நடத்தி யாக வேண்டிய அவசியமில்லை. மேல்தட்டு மக்களின் கூட்டம் மூதறிஞரின் கூட்டணி காரணமாகவே அவ்னை முழுமனதுடன் ஆதரித்தது. ஒப்புக்கொண்டது. ஏற்றுக் கொண்டும் விட்டது.

தேர்தலுக்கு ஒன்றரை மாதக்காலத்துக்கு முன்பே அவன் தன் ஆட்களுடன் எழிலிருப்பில் முகாம் போட்டு விட்டான். வெட்டுக் காயத்தோடு இளம் நடிகையையும் அருகே வைத்துக் கொண்டு, ம்ொழிப் போரில் விழுப்புண் பெற்ற வீரர்-அழிப்போரை எதிர்த்தழிக்கும் ஆற்றல் மறவர்’ என்ற பிரசுரம் அடங்கிய பெரிய படத்துடன் கூடிய சுவரொட்டியை அவன் ஒட்டியதால் அவனுடைய மைத்துனன் அதாவது மூத்த மனைவி சண்பகத்தின் தம்ப் தேர்தலில் அவனை எதிர்த்து ஜமீன்ந்தாருக்காக வேலை செய்தான். கீழ்த்தரமான பிரச்சாரங்களில் பரம்பரைப் பெரிய மனிதனான ஜமீன்தாருக்கு விருப்பமில்லை. என்றாலும் திருமலை சார்ந்திருந்த கூட்டணி ஜமீ