பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நா. பார்த்தசாரதி:

விஜயவாடாவுக்கு ஓடிவிட்டாள்- என்ற தகவல் தெரிந்தது. திருமலைக்கு அப்போது அவள் தன்னை. விட்டு ஓடினதை விட அந்தச் செய்தி பத்திரிகைகளில் வராமலிருந்தாலே தேர்தல் பிழைக்கும் என்று தோன்றி யது. இந்தி எதிர்ப்புப் போரில் வெட்டுக் காயத்துடன் எடுத்த புகைப்படத்தின் அழகியான அவள் அருகேயிருந்து கண்ணிர் உகுப்பது போல் சுவரொட்டிகளை ஆயிரக்கணக் கில் அச்சிட்டு ஒட்டியிருந்தான் அவன். இந்த நேரத்தில் அவள் அவனை விட்டு ஓடிவிட்டாள் என்ற செய்தி பத்திரி கைகளில் வந்தால் பெரிதும் பாதிக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. தேர்தல் முடிகிற வரை எதுவும் பத்திரிகை களுக்குத் தெரிய வேண்டாம் என்று எல்லாத் தரப்பிலும் எச்சரித்து வைத்தான். ஒன்றரை மாதத்துக்கு மேல் அவன் ஊரில் இல்லாததைப் பயன்படுத்தித் தன் பெயரிலிருந்த அந்த பங்களாவைக் கூட யாருக்கோ விற்று முடித்திருந். தாள் அவள். இது திருமலைக்குத் தெரிந்தபோது ஆத்திரம் ஆத்திரமாக வந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளிவருகிற வரை இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதில்லை. என்ற பிடிவாதத்தோடு மெளனமாக இருந்தான் அவன், எவ்வளவோ பக்காவாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய். திருந்தும் தப்பிவிட்டாள் என்பது எரிச்சலூட்டியது. ஒரு. தங்க்ச் சுரங்கம் யாருக்கும் தெரியாமலே அட்ைபட்டுப் போனது போல் ஏற்ாற்றமாயிருந்தது. ஆனால் ஒன்றும் பெரிதாகக் குடி முழுகிப் போய் விட்டதாக அவன் ஒடுங்கி ஒய்ந்து உட்கார்ந்து விடவில்லை. இன்ன்ொரு தங்கச் சுரங் கத்தைத் தேடிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்ததுதான் காரணம். அடிக்கடி அண்ணன், "தட்டி னால் தங்கம், வெட்டினால் வெள்ளி, தோண்டினால் தோரி யம்? செதுக்கினால் செம்பென் அகழ்ந்தால் அலுமினி யம், சுரண்டினால் துத்தநாகம்’-என்று அழகுற மேடை யில் அடுக்கும் சொல்நயத்தை நினைவு கூர்ந்தான் அவன். மற்றொரு தங்கக் கட்டியைத் தட்டி எடுக்கமுடியும் என்றும்