பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக் கனல் 1ምU8

உண்ணக் கிடைத்தால் போதுமென்று கையேந்திய வனுக்கு உள்ளே வா, விருந்து படைக்கிறேன்’ என்று தலைவாழை இலை போட்டு வடை, பாயசத்துடன் விருந்து படைத்திருந்தார்கள் தமிழக மக்கள். வெற்றித் திகைப்பையும். சந்தோஷ அதிர்ச்சிகளையும் தாங்கிக் கொண்டு விழுந்து செயல்படவே சில நாட்கள் ஆயின. வென்றவர்களுக்கு. - -

மக்களுக்கும், தங்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்ட மூத்த தலைவர்களை ஒவ்வொருவராகப் போய்ப் பார்த்து ஆ பெறத் தொடங்கினார்க்ள் வென்றவர்கள். திாங்கிள் பயின் று வளர்ந்து ஆளான ஈரோட்டுத் தத்துவத்தின் தந்தையான ஐயர்வைப் பார்த்து வணங்கி ஆசிபெற்றனர். அவரும் ப்ெருந்தன்மையாக அவர்களை வர்வேற்று வாழ்த்தினார். மூதறிஞர், பெருந்தலைவர், என்று கட்சி பேதம், கொள்கைபேதம் பாராம்ல் ஒவ்வொரு தலைவரை யும் சந்தித்து ஆசி கோரினார்கள் அவர்கள். இவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த சாதாரண மாணவன் ஒருவனிடம் தோற்றிருந்த நில்ையிலும், பெரும்_தியாகியும் மக்கள் தலைவரும் ன காமராஜ் அவர்கள்,"இது மக்கள் தீர்ப்பு. மதிக்கிறேன்"- என்று மிகவும் க ண் ணி ய ம க த் தோல்வியை ஒப்புக் கொண்டார், வாழ்த்தினார்.

இயக்கத்தைச் சேர்ந்த புதிய சட்டமன்ற உறுப்பினர் கள் கூடின்ார்கள். அமைச்சர்களைத் தேர்த்தெடுக்கும் வேலையைக் கவனமாகச் செய்ய வேண்டியிருந்தது. அண்ணன் உட்பட அவர்கள் அனைவருக்கும் ஆட்சிய நுபவம் புதியது. இதுவரை புரிந்திர்ாதது. எதிர்க்கட்சியாக இருக்கிறிவன் ஓர் அரசியல் கட்சி அனுபவிக்கிற அசாத் தியத் துணிச்சல்ையும், விமர்சனம் செய்யும் உரிமைகளை யும் அது ஆட்சிக்கு வந்த மறுகணமே இழந்து விடுகிறது,

ருமன்ல வகையறாவும் அப்பேர்து அந்த நிலைமையில் தான் இருந்தார்கள் ஆண்ால் அண்ணனின் சாதுரியமும் நிதானமும் அவர்களுக்குப் பேருதவியாயிருந்தன. ஆட்சியை அமைக்கும்.அந்தி நேரத்தில் அண்ணன் மிகப் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டார். அம்ைச்சர் பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் களில் திருமலையின் பெயரும் இடம் பெற்றிருந்தது.