பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 5T. பார்த்தசாதி

"இலாகாவில் படித்த அதிகாரிகள், விவரம் தெரிந்த ஐ. ஏ. எஸ். எல்லாம் இருக்கிறார்கள். நடைமுறை அவர் களுக்குத் தெரியும்’

அதிகாரிகளை நம்பலாமா? அவர்கள் எல்லோரும் முந்திய அரசில் பல ஆண்டுகள் இருந்தவங்கதானே? g

فما

இதைக் கேட்டு அண்ணன் மேலும் சிரித்தார். தம்பி அரசுகள் மாறலாம். ஆனால் அரசாங்கம் மாறாது. இந்தி

சன் மாறினால் இந்திரணியும் இந்திரலோகத்து நடன அழகிகளும் மாறிட வேண்டுமென்ற அவசியமில்லை.

மாழி ஆந்திருக்கும் புதிய இந்திரனுக்கு ஏற்றபடி ஆடி

? -T: - : يثي يييير جة ييجو هي *. *, * x - மகிழ்விக்க அவர்களுக்குத் தெரியும்.'

அண்ணனின் இந்த உவமையில் அவனுடைய சந்தே கத்துக்கு விடை இருந்தது. தன்னுடைய ஐயப்பாட்டைத் தெளிவிப்பதற்கு அண்ணன் கூறிய உவமையின் அழகில் நெடுநேரம் மெய்ம்மறந்திருந்தான் அவன்.

தேர்தலுக்கு முன் அவர்களுடைய இயக்கம் அறிவித். திருந்த இரண்டு கொள்கைப் பிரகடனங்களை அமுல் செய்வதில் இப்போது சிக்கல் எழுந்தது. அரசின் தலை மைச் செயலாளரும் நிதித்துறைக் காரியதரிசியும் அவை: நடைமுறையில் சாத்தியமாக முடியாத கொள்கைகள் என்று பலமாகத் தடுத்து முட்டுக்கட்டை போட்டார்கள்.

"மூன்றுபடி லட்சியம்-ஒரு படி நிச்சயம்-என்பது. சொல்ல அழகாயிருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப் படிச் செய்தால் பொருளாதார ரீதியாக அரசாங்கம் திவா லாகி விடும் என்றார்கள் அதிகாரிகள். இரண்டாவது. சிக்கல் அமைச்சர்களின் சம்பளம் பற்றியது. தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு முந்திய ஆட்சியின் அமைச்சர்கள் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் பாதிச் சம்பளமே. போதுமானது என்று கூறியிருந்தார் அண்ணன்.