பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 127

'மற்ற மாநிலங்கள், நாடுகளில் அமைச்சர்கள் பெறும் சம்பளங்கள் வசதிகளைவிட இங்கு அவர்கள் வாங்கும் தொகை மிகக் குறைவு, அதை மேலும் குறைத் தால் காணாது. மக்களுக்கு அமைச்சர்கள் மேல் வேறு வகையான சந்தேகங்கள் வரும். மூடிவில் நீண்டநாள் கடை பிடிக்க முடியாது ஒருவகை 'சீப் ஸ்டண்ட் ஆகிவிடும் இது நடைமுறைக்கு ஒத்து வராது" என்றார்கள் அதிகாரி. கள். இதை அண்ணன் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந் தார். அவனும் உடன் இருந்தான். 'சீப் ஸ்டண்ட்: என்று அவர்கள் பயன்படுத்திய வார்த்தை அவனுக்கு ஆத்திரமூட்டி வீட்டது. இந்தப் பதவியின் சம்பளமும் வரு மானமும் எங்களுக்குப் பிச்சைக்காசுக்குச் சமம். பேசச் செல்லும் ஒவ்வோர் இயக்கக் கூட்டத்துக்கும் ஐநூறு ரூபாயென்று வைத்தோமானால் மர்த மாதம் நாங்கள் ஐம்பதினாயிரம் கூட்ச் சம்மாதிக்கலாம்” என்று சீறினான் அவன் . . . . . . . . . - அமைச்சரானபின் அரசாங்கப் பயணப்படி, ஆல வன்சுகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களில் பணம் கை நீட்டி வாங்குவது என்பது நாளடைவில் ஒரு வகை லஞ்ச ம்ாக மாறிவிட நேரும்’ என அதிகாரிகள் மீண்டும் குறுக் கிட்டபோது முன்னைவிட ஆத்திரமடைந்த திருவை அண்ணன் சமாதானப்படுத்தினார். 'கட்சியும் ஆட்சியும். ஒன்றில்லை' என்பதை அவனுக்கு விளக்கினார். முடிவில் படி அரிசித் திட்டத்தைச் சில இடங்களில் மட்டும் பரீட், சார்த்தமாக அமுல் செய்து பார்க்க அதிகாரிகள் அரை மனத்தோடு இணங்கினார்கள். காபினட் அமைச்சர்கள் பாதி சம்பள விஷயத்தில் அவர்கள் அதிகம் தலையிட்டு முழுச்சம்பளமுமே பெறுமாறு வற்புறுத்தவில்லை. புதிய ஆட்சியும், புதிய மந்திரிகளும் நாளடைவில் முழுச்சம்பளத். தின் அவசியத்தைத் தாங்களே புரிந்து கொள்வார்கள் என்று விட்டு விட்டார்கள். அதிகாரிகளிடமும் ஆட்சி அமைப்பிடமும் அண்ணனுக்கு இருந்த நிதானம் மற்றத்.