பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 131

இருந்தது அமைச்சரின் நிபந்தனை. ஆனால் அமைச்சரான திருவுக்கோ ஊரறிய, உலகறியத் தன்னிடம் தோற்ற முன் னாள் அமைச்சரும் முன்னாள் ஜமீன்தாருமான உடையார் குடும்ப சகிதம் தன்னைத் தேடி வந்து உள்பட்டணத்துக்கு அழைத்தார் என்று பாமர மக்கள் ப்ேசிக் கொள்ளச் செய்து விட வேண்டும் என்பதில் அதிக அக்கறை இருந்தது. அதனால் ஊர் உலகத்தில் தன்னுடைய மரியாதை கூடும் என்று இரகசியமாக நம்பினான் அவன். எந்த டி.பி.யில் ஒரு பெண்ணுடன் தான் தங்கியது வெளிப்பட்டுத் தனக்குத் தற்காலிகமான அபவாதத்தை ஏற்படுத்தியதோ அந்த டீ. பி. யில் ஜமீன்தாரும், ராணியும் தேடி வந்து தன்னை அழைத்தார்கள் என்று புத்திரிக்கையில் புகைப்படத்தோடு செய்தி வசச் செய்துவிட ஆசைப்பட்டான் அவன்.

உள்பட்டனத்துப் பிரமுகர்களில் வயது மூத்த ஒருவர் துணிந்து உடையாரிடமே நேரில் போய் "பெரிய மனசு பண்ணி ஊர் நன்மையை உத்தேசித்து நீங்க மந்திரியை நேரிலே போய் அழைக்கனும்’-என்று வேண்டிக் கொண் டார். ஜமீன்தாரும் பரந்த மனப்பான்மையோடு அதற்கு இணங்கினார். பணியும்ாம் என்றும் பெருமை-என்ற் பழ் மொழிக்கு உடையாரும், சிறுமை அணியுமாம் தன்னை வியந்து' என்ற பழமொழிக்கு அமைச்சர் திருவும் உதார். -ணங்களாய் இருப்பதாக அழைக்கப் போன பெரியவருக்

குத் தோன்றியது. -

ஜமீன்தாரும், ராணியும் திருவைத் தேடிச் சென்ற போது சுற்றியிருந்த எல்லோரும் காண ஒரு நிமிஷம் அவர்களை நிறுத்தி வைத்தே தான் உட்கார்ந்தபடி பேசி னான் திரு. அடுத்த நிமிஷம் அவர்களை உட்காரச் சொல் லிவிட்டு இன்னொரு தர்ம சங்கடமான நிவந்தனையை மெல்ல அவர்களிடம் வெளியிட்டான். ஆனால் உடையார் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார்.