பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நா. பார்த்தசாரதி

குடும்பத்தின் நற்பெயரைக் காப்ப்ாற்றுவது தன் கடமை யில்லை என்று விட்டுவிட்டான். உள்பட்டணத்து வரவேற் புக்குப் பதிலளித்துப் பேசுகையில் திரு மீண்டும் பொடி வைத்தே பேசினான். 'கண்கொள்ளாக் காட்சியை.. என்றுமே கண்டிருக்க முடியாத விநோதக் காட்சியை இந்த ஊர் இன்று காண்கிறது. ஊர் பேர் தெரியாத அநாதையான இந்த ஏழைத் திருமலைராசன் தேர்தலிலே வெற்றிவாகை சூடி அமைச்சனாகவும் பதவி ஏற்று வந்திராத பட்சத்தில் செல்வச் சீமான்கள் நிறைந்த இந்த உள்பட்டணம் இப்படி வரவேற்க முன் வந்திருக்குமா? இத்தனை பெருந்தலைகள் பயபக்தியோடு பழத்தட்டுக் களைக் கைவலிக்கச் சுமந்து எதிர்கொண்டு வந்திருப்பார் களா? அரண்மனைகளின் வாயில்கள் இப்படி எல்லாம் அகலத் திறந்திருக்குமா? கோட்டைக்குள்ளேதான் நுழைய விட்டிருப்பார்களா? அந்தக் கோட்டையை நாங்கள் பிடித் திராவிட்டால் இந்தக் கோட்டைக்குள் இத்தளை மரியாதை எங்களுக்குக் கிடைத்திருக்குமா?

இப்படி அவன் பேச்சைத் தொடங்கியதும் சின்ன உடையார் மனம் வருந்தினார். ஒருவித உள்நோக்கமும் இல்லாமல் தான் காட்டிய பெருந்தன்மையை அவனும் அவனது கட்சி ஆட்களும் இப்படிக் கொச்சைப்படுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை. தான் சிமெண்ட் தொழிற் சாலைக்காகத்தான் இதைஎல்லாம் செய்வதாக ஏற்கெனவே திருவின் கட்சி ஆட்கள் பரப்பியிருந்த புரளி வேறு அவர் காது வரை. எட்டியிருந்தது. மன்னரும் ராணியும் எதிர்கொண்டு வரவேற்காவிட்டால் நான் உள்பட்டணத்து வரவேற்பிலேயே கலந்து கொள்ளமாட்டேன்'- என்று அவன் முரண்டு பிடித்த காரணத்தால் தான் ஒதுங்கி நின்று ஊராருக்குத் தர்மசங்கடமாகி விடக் கூடாதே என்றுதான் சின்ன உடையா இதில் கீழே இறங்கி வந்து வேன்ல செய்தார் தமது பண்பு தவறாக வியாக்கியானம் செய்யப்படுவதைப் பல்லைக் கடித்தபடி பொறுத் துக் கொண்டார் அவர். அற்பர்களிட்ம் பெருந்