பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நா. பார்த்தசாரதி

பூட்டு வலித்தது. விழுந்து கிடந்த இடத்திலிருந்தே கண் களைத் திறந்து அந்த மங்கிய இருளில் பார்த்தபோது குகையில் அநுமார் கோவில் அணையாவிளக்கு எரிவது. தெரிந்தது. தேரடிக்கும் அநுமார் பாறைக்கும் நடுவேதான் விழுந்து கிடப்பது தெரிந்தது தன் பெயரோடு எதிரே கோவில் கொண்டிருக்கும் திருமலைராஜப் பெருமாள் சந்நிதியின் கோபுர விளக்கு உயரத்தில் தெரிந்தது, கோபுர வாசல் முகப்பில் வைகுந்த ஏகாதசிக் கூட்டத்தின் குரல் களும் சந்தடியும் மெல்ல ஒலிப்பதை அவன் விழுந்து கிடந்த தொலைவிலிருந்தே கேட்க முடிந்தது, அவர்கள் அடித்திருந்த இராட்சத அடிகளில் இறந்து போயிருந் தால்கூட வைகுண்ட ஏகாதசியன்று இறந்த புண்ணியம் தனக்குக் கிடைத்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றி யது. ஒருகணம்தான் அந்த நினைப்பு நீடித்தது. ஏதோ ஒன்று சாதித்து முடிக்கப்படுகிற வரை தான் இறக்கக் கூடாது என்ற பிடிவாதமும் வாழ வேண்டும்-வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியமும் உடனே அடுத்த கணமே தோன்றின. உடம்பிலும். மனத்திலும் ஏதோ ஒன்று ஜிகுஜிகுவென்று வேகமாகப் பற்றி எரிவதுபோல் அவன் உணர்ந்தான். அந்த எரிச்சல், அந்த தகிப்பு அவ்வளவு விரைவில் அடங்கி விடமுடியாதென்று அவனது உள்ளுணர்வே அவனுக்குச் சொல்லியது. - எந்தத் தேரடி மண்ணில் தான் வீழ்த்தப் பட்டோமோ அந்த இடத்திலிருந்தே எழுந்து நின்று வாழ்ந்து காட்ட வேண்டும் போல் தவிப்பாயிருந்தது. வீழ்த்தப்பட்டதன் காரணமாகவே எழுந்திருக்க வேண்டுமென்றும் ஒடுக்கப் பட்டதன் காரணமக்கவே உயர வேண்டுமென்றும் துடிப் பாயிருந்தது. கண்கள் சோர்ந்து போய் மூடின. தளர்ச்சி உடம்பை அசைக்க முடியாமல் கட்டிப் போட்டிருந்தது. விண்விண்ணென்று இசிவெடுத்து வலித்தது.

அப்போது தாமரைக் குளத்தின் பக்கமிருந்து ஜலதரங் கம் வாசிப்பது போல் வளையொலி அவன் பக்கமாக