பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் 五器翌

ஏற்பட்டது. பண்பாடும், கை சுத்தமும் உள்ள பலர் அரசியலிலிருந்தே ஒதுங்க ஆரம்பித்து விடுவார்கள் என்ப தற்கான அடையாளம் தெரிந்தது. மறுவாரமே திருவின் கட்சிப் பத்திரிகை ஒன்றில், சிமெண்ட் தொழிற்சாலைக் காகக் காக்காய் பிடித்த ஜமீன்தாரின் தந்திரம் பலிக்க வில்லை கெரீள்கை மறவர் திரு கொடுத்த சூடு”. என்று இந்த விவரம் ஒரு கட்டுரையாகவே வத்துவிட்டது. * சிமெண்ட் தொழிற்சாலை என்பது வெறும் கற்பனை. அம்மாதிரி எந்த உதவியையும் ஜமீன்தார் என்னிடம் நாடவில்லை - என்று திருவே இதை மறுத்து அறிக்கை விடாததிலிருந்து அவனே ஒரு பெருமைக்காக இந்தப் பொய்யைப் பரப்பியிருக்கக் கூடும் என்று சின்ன உடையார் புரிந்து கொண்டார். 'பொய்யுடை ஒருவன் செல் வன்மையினால் மெய் போலும்மே மெய்போலும்மே” -என்பது நிரூபணமாகிக் கொண்டிருந்தது. பணமின்றி அரசியல் நடக்காது என்பதைப் புரிந்து கொண்ட திரு தொழிலதிபர்களிடமும், பணக்காரர்களிடமும் தாராள மாகக் கைநீட்டி வாங்கினான். ஆனால் மேடையில் பேசும் போது மட்டும், 'முந்திய ஆட்சியில் இருந்ததுபோல் எங்கள் ஆட்சியி லஞ்ச ஊழல் இல்லை! இது ஏழை எளியவர்களின் ஆட்சி! -என்று முழங்கினான். ஓர் எதிர்க் கட்சிப் பத்திரிகை இதைக் குறும்புத்தனமாக வியாக்கி யானம் செய்தது. - . . . .

'முந்திய ஆட்சியில் இருந்தது போல் எங்கள் ஆட்சி வில் லஞ்சம் இல்லை எனஅமைச்சர் திரு பேசுவதில் ஒர். அர்த்தம் இருக்கத்தான் இருக்கிறது. உண்மையில் முந்திய ஆட்சியில் இருந்ததைவிட லஞ்ச ஊழல் இப்போது பல மடங்கு அதிகரித்து ரேட்கள் அதிகமாகி விட்டன. அதைக் குறிப்பாக உணர்த்துவதற்காகவே அமைச்சர் அடிக்கடி, "முந்திய ஆட்சியில் இருந்ததுபோல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை”-என்று சொல்கிறார். இந்த சமிக்ஞையை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்