பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நா. பார்த்தசாரதி.

விஷயமாகத் திருவைத் தானே நேரில் எச்சரிப்பதற்குப் பதில் வயது மூத்தவரும் அநுபவசாலியுமான தலைமைச் செயலாளரிடம் சொல்லி அனுப்பினார். தலைமைச் செய லாளர் அவனை அவனுடைய வீட்டிலோ, கோட்டை யிலோ சந்திக்கவே முடியவில்லை. சிவனே என்று தலை யெழுத்தை நொந்து கொண்டு அவர் தாண்டவராயனின் கெஸ்ட் ஹவுஸாக்குத்தான் அவனைத் தேடிப் போக வேண்டியிருந்தது. அவருக்கு இது புது அநுபவம்.

ஃபைல்கள் பிரித்துக் கிடந்தன. லுங்கி பனியனோடு இருந்த திருவுக்கு சிவாஸ்-ரீகல்-விஸ்கியை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ரோஸி. தலைமைச் செய லானருக்கு ஏனடா இங்கு வந்தோம்?-iன்று அருவருப் பாக இருந்தது. ஆனாலும் முதலமைச்சரின் கட்டளையை

அவர் புறக்கணிக்க மூடியவில்லை. மென்று விழுங்கியபடி திருவிடம் பேச ஆரம்பித்தார் அவர். - . *

ஒரு நிமிஷம் வெளியே போய் இருக்குமாறு அவ னோடு இருந்த ஆங்கிலோ இந்திய யுவதிக்கு அவர் ஜாடை காட்டினார். அதற்கு அவள் அவரைக் கொஞ்சம் முறைத்தாற் போலப் பார்த்துவிட்டு.வெளியேறினாள். பதவி ஏற்ற போது நி க ழ் ந் த இரகசியக் காப்புப் பிரமாணத்தை நினைவூட்டி ஃபைல்களை இப்படிப் பார்ப் பது முறையில்லை என்றார். தலைமைச் செயலாளர். அதிகம் டைல்யூட் செய்யப்படாமல் உள்ளே போயிருந்த வெளிநாட்டுச் சரக்கின் முறுக்கிலிருந்த திரு உடனே வெளியே போயிருந்த சோலியைத் திரும்பவும் உள்ளே கூப்பிட்டான். தீ இங்கேயே அருகிலி ரு நான் கொன் னால்தான் நீ போக வேண்டும். வேறு யாரோ சொன் னார்கள் என்பதற்காகப் போகக் கூடாது'-என்று. அவளிடம் சொல்லிய சுவட்டோடு தலைமைச் செயலாள ரின் பக்கம் திரும்பி, "நான் மந்திரியா? நீங்க மந்திரியா? நான்தான் உங்களுக்கு உத்தரவு போடனுமே ஒழிய நீங்க