பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நா. பார்த்தசாரதி

சில வருடங்கள் ஓடின. முன்பு அவனைத் தாக்கி

எழுதிய அதே பத்திரிகை மறுபடி அவன் மேல் தன் கவனத்தைத் திருப்பியது. அவனை மட்டும் "லிங்கிள் அவுட் செய்து மறுபடியும் தாக்கியது. -

'முந்திய ஆட்சியில் இடிந்ததுபோல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை-என அமைச்சர் திரு பேசுவதில் ஒர் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. உண்மையில் முந்திய ஆட்சியில் இருந்ததைவிட லஞ்ச ஊழல் இப்போது இந்த ஆட்சியில் பல் மடங்கு அதிகரித்து ரேட்கள் மிகவும் கூடுதலாகி விட்டன. அதைக் குறிப்பாக உணர்த்துவதற். காகவே அமைச்சர் திரு அடிக்கடி முந்திய ஆட்சியில் இருந்தது போல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை’ என்று சொல்கிறார். இந்தச் சமிக்ஞையை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்’-என்று முன்பு எழுதி அவனை வம்புக்கு இழுத்த அதே எதிர்க்கட்சிப் பத்திரிகை இப்போது, ஆசை நாயகி வீட்டில் அரசாங்க ஃபைல்கள். என்றொரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. முந்திய கட்டுரையை எழுதிய 'எழில் ராஜா' என்பவனே இந்தக் கட்டுரையையும் எழுதியிருந்தான். யார் இந்த எழில் ராஜா? இவனுக்கு ஏன் என்மேல் மட்டும் இத்தனை காட்ட மும், ஆத்திரமும்? இவற்றை எல்லாம் அறியும் ஆவலில் போலீஸ் சி.ஐ டி. மூலமும், கட்சி உளவாளிகள் மூலமும் அந்த எழில்ராஜாவைப் பற்றித் தகவல்களைச் சேகரிக்கத். தொடங்கினான் திரு. தகவல்கள் தெரிந்தன. ப்ணத்தை வீசி எறிந்து எழில் ராஜாவை வசப்படுத்த முடியாதென்று. தெரிந்தது .

எழில்ராஜா மாணவப் பருவத்திலிருந்தே திருவுக்கு எதிரான அரசியல் அணியில் தேசீய இயக்க ஆளாக வளர்ந்த ஓர் இளைஞன் என்பதும் பட்டப்படிப்பு முடித்து ஓராண்டு ஜர்னலிலம்- டிப்ளமாவுக்காகப் பயிற்சியும் பெற்று முடித்து இப்போதுதான் அந்தப் பத்திரிகையில் சேர்ந்திருக்கிறான் என்றும் தெரிந்தது. இன்வெஸ்டி