பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 145

கேடிவ்" வாக எழுதுவதில் ஆர்வும் அதிகமென்றும் அவ னைப்பற்றிச் சொன்னார்கள். தொடர்ந்து தன்னைப் பற்றியே குறிவைத்துத்தாக்கி எழுதும் அந்தப்பொடியனை எப்படிப் பழி தீர்ப்பது என்று திரு யோசிக்கத் தொடங்கி னோன். இன்று அதுவும் ரோசியையும், தன்னையும் சம் பந்தப்படுத்தி அவன் எழுதியிருந்ததையும் ஆசை நாயகி யின் அந்தப்புரத்தில் அரசாங்க ஃபைல்கள்" என்ற கட்டு ரையைப் படித்ததிலிருந்தே தி ரு வு க்கு அ வ ைன த் தொலைத்துவிட வேண்டும் என்று வெறி மூண்டிருந்தது. "ஒரு கவலையும் வேண்டாம்! நீங்கள் இங்கே வருவது போவது, ரோலியிடம் பழகுவது எல்லாம் பரம ரகசியமாக இருக்கும்'- என்று தாண்டவராயன் பலமுறை உறுதி கூறியிருந்தும் இந்த விவகாரங்கள் எப்படி லீக் ஆகின் றன என்பது திருவுக்கே புரியாத புதிராகயிருந்தது. தன் வலையில் சிக்கிய மந்திரிகள் தனக்கு எதிராகப் போய் விடக்கூடாதென்பதற்காகத் தாண்டவராயனே இரகசியமா கப் பின்னால் அவர்களைப் பிளாக்மெயில் செய்யப் பயன் படும் என்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம். திருவுக்கு ரோஸி மது ஊற்றிக் கொடுப்பது போல் தாண்டவராயன் ரகசியமாக எடுத்த புகைப்படம் ஒன்றை பிரிண்ட் போடக்கொடுத்த் இடத்தில் -பிரிண்டி போட்டவன் அதிகப்படியான பிரிண்ட் ஒன்றை எடுத்துக் கொண்டுதான் 'நெகடிவை வைத் திருப்பிக் கொடுத்தான். இதை எப்படியோ மோப்பம் பிடித்துச் சில ஆயிரங்கள் வரை விலை கொடுத்து அந்த "பிரிண்ட் டை வாங்கினான். எழில்ரர்ஜா, இரண்டு ரூபாய் பெறுமானமுள்ள பிரிண்டுக்கு ஆயிரணக்கணக்கில் பணம் கிடைக்கும்போது ஸ்டுடியோக்

காரன் அதைக் கொடுப்பதற்குத் தயங்கவில்லை. -

அதுமட்டும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பத்திரிகையாக இல்லாத பட்சத்தில் திரு அந்தப் பத்திரிகை முதலாளியைக் கூப்பிட்டே அரட்டி மிரட்டி எழில்ராஜவை லேலையி. லிருந்து துரத்தும்படிச் செய்திருப்பான். அல்லது மேற்