பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 - - நா. பார்த்தசாரதி

கொண்டு தன்னைப்பற்றி எதுவும் எழுத முடியாதவாறு: அவர்களைத் தடுத்திருப்பான். - -

அது நூற்றுக்கு நூறு அவனது எதிர்த்தரப்புப் பத்திரி கையாகவே இருந்ததனால் அப்படி ஏற்பாடு எதுவும் சாத். தியமாகவில்லை, தவிர எழில்ராஜாவின் கட்டுரைகள் மிகவும் பரபப்பாகப் பேசப்பட்டு அறத பத்திரிகையின் விற். பனையே அதன் காரணமாகப் பல ஆயிரம் பிரதிகள் கூடி யிருந்தன. இன்வெஸ்டிகேஷன், பிரயாணங்கள். தடயங் கள் , தடையங்களை விலைபேசி வாங்குதல், ஆகியவை களில் எழில்ராஜாவுக்கு ஆகிற செலவுகளையெல்லாம். அந்தப் பத்திரிகை மிகவும் தாராளமாகவே செய்வதாகத் திருவுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதனால் பத்திரிகை நிறுவனத்தை மிரட்டி ஒடுக்கும் செயல் பயளிைக்காது என்று புரிந்துவிட்டது. எழில்ராஜாவை எப்படித் தொலைப் பது என்று அவன் எரிச்சல் பட்டுக்கொண்டிருந்த சமயத் தில் விஸ்கிக்கும் விலைமாதருக்கும் நடுவில் அரசாங்கப் ஃபைல்கள் என்ற மூன்றாவது கட்டுரையும், அந்தப் புகைப் படமும் வெளிவந்து திருவை ஒரு வ ரகாலம வெளியே தலை காட்ட முடியாமல் செய்து விட்டது. தாண்டவராய னின் கெஸ்ட் ஹவுஸில் மேசையில் கிடக்கும் அரசாங்கப் ஃபைல்களோடு ரோலி தனக்குப் பாட்டிலிலிருந்து மது ஊற்றிக்கொடுப்பதுபோன்ற அந்தப் புகைப்படத்தை யார் எப்படி எடுத்துக் கொடுத்திருப்பார்கள் என்பதுதான் திரு வுக்கு விளங்காத மர்மமாயிருத்தது ஒரு கணம் தாண்டவ. ராயன், ரோஸி, ஹெஸ்ட் ஹவுஸ் வேலையாட்கள் என் லோர் மேலேயும் சந்தேகமாயிருந்தது. - இனியும் ப்ொறுத் துக்கொண்டிருக்க முடியாது என்ற அளவு அவனுடைய. ஆத்திரம் எல்லைமீறிப் போய்விட்டது. ஒன்று- தான் உயிர்வாழ வேண்டும் அல்லது அந்தப் பொடியன் எழில் ராஜா உயிர்வாழ வேண்டும், என்ற வைராக்கியத்தோடு, ஒரு முடிவு செய்தாக வேண்டிய நிலைக்குத் தூண்டப்படி டான் அவன், எவ்வளவு செலவானாலும் பரவயில்லை,