பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் :- - 盘器。

நெருங்கி வருவது கேட்டது. சில விநாடிகளில் அந்த வளையொலியுடன் பூக்களின் கதம்பமான நறுமணத்தை யும் அவன் நாசி உணர்ந்தது. மெல்லக் கண் விழித்தால், அந்த நேரத்தின் தேதையாகிய உஷையே நீராடி விட்டுப் பூக்குடலையோடு அருகே வந்து நிற்பது போல் ஒர் இளம் பெண் நின்றாள். அவளருகே கோயில்களில் எல்லா விளக்கு களையும் திரியிட்டு ஏற்றுவதற்காக எண்ணெய்த் திரியுடன் எடுத்துப் போகும் கைவிளக்கோடு ஒருமுதியவரும். நின்றார். உற்றுப் பார்த்ததில் நந்தவனத்துப் பண்டார மும் அவர் மகளும் என்று மெல்ல மெல்லப் புரிந்தது. அவர்கள் பதறினார்கள். தனக்கு யாரால், என்ன நேர்ந்தி தென்று கோவையாக அவர்களிடம் எடுத்துச் சொல்லக் கூட வரவில்லை அவனுக்கு.

2

'ஐயா அரைத்துப் போட்டிருக்கிற பச்சிலைகளும். கட்டியிருக்கிற பட்டை மருந்துகளும் உங்களைக் குணப். படுத்துமோ இல்லையேர் இந்தப் பூவாசனையும், சந்தன. மணமுமே சீக்கிரம் குணப்படுத்தி விடும்னு நினைக் கிறேன்.’’

கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த அவனைப் பார்த்துக் சொன்னாள் பூத்தொடுத்துக் கொண்டிருந்த பண்டாரத். தின் மகள் சண்பகம். கட்டிலுக்கு இப்பால் நின்றபடி பண்டாரம் அப்போது சந்தனம் அறைத்துக் கொண்டிருந்: தாா. - -

தன் வலது கையால் தலையைத் தாங்கி முட்டுக் கொடுத்துக் கொண்டே அவள் பூத்தொடுக்கும் அழகை இரசித்தபடி கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்துப் படுத். திருந்த திருமலை அவள் கூறியதைக் கேட்டுப் பதில், எதுவும் கூறாமல் புன்னகை பூத்தான். அவள் என்ன சொல்லியிருந்தாளோ அதை ஒப்புக் கொண்டு அங்கி கரிப்பது போலிருந்தது அந்தப் புன்னகை. -