பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நா. பார்த்தசாரதி

திருத்தி அளிக்க வருவதோடு இப்போது அவர் தொடர்பு மிகவும் குறைந்து போயிருந்தது. -

இன்று வந்ததும் வராததுமாக அவரே அவனை முந்திக் கொண்டு ஆரம்பித்தார். அவரது குரலிலும், முகத் திலும் ஒரே ஆச்சரிய மயம்.

"'உங்களுக்குத் தெரியுமோன்னோ? அதைச் சொல்லிட் டுப் போலாம்னுதான் வந்தேன். ஒருவகையிலே உங்க ளுக்கு அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருக்கும். இன் னொரு விதத்திலே நீங்க பெருமைப்படவும் செய்ய லாம்...' என்று தொடங்கி ஒரு கணம் நிறுத்தி விட்டுச் சர்மா சொன்ன தகவலைக் கேட்டதும் தன் தலையில் பயங்கரமான பேரிடி ஒன்று விழுந்ததுபோல் உணர்ந்தான் திரு.கண்மூன் உலகமே இருண்டு கொண்டு வந்தது.

'பாவி மனுஷா நீர் ஒரு நிமிஷம முன்னால் வந்து தொலைத்திருக்கக் கூட த எ? -என்று அவனுடைய உட்ள்ளம் கேர்வென்று கதறி அலறியது. ஆனால் பேசக் குரல் எழவில்லை.

22

பத்திரிகையிலே உங்களைப்பற்றிக் கட்டுரை எழுதற எழில்ராஜா வேறு யாருமில்லை! சண்பகத்திட்ட உங்களுக் குப் பிறந்த மகன்தான். நீங்க ராவணன்னு அவனுக்குப் பேர் வச்சீங்க சண்பகம் அது பிடிக்காமே ராஜான்னு கூப்பிட- அதுவே நிலைச்சுப் ப்ோச்சு எழில்ங்கிறது ஊர்ப் பேரோட தொடக்கம். ராஜாங்கிறது” சொந்திப் பேரு -என்று சர்மா விவரித்தபோது திருவுக்குத் த்ன்ல சுற்றியது. சப்த நாடியும் ஒடுங்கினாற்ப்ோல் ஆகிவிட்டது. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவின் கதறினான். விழில்ராஜாவைத் தீர்த்துக் கட்டச் சகல் ஏற் பாடுகளுடனும் புறப்பட்டு விட்டவர்களை எப்படித் தடுப்ப, தென்று இப்போது புரியவில்லை, முகத்திலும், 'உடலின் மற்ற பகுதிகளிலும் தெப்பமாக வேர்த்து விட்டது.

'என்ன? உங்களுக்கு என்ன ஆயிடுத்து இப்போ?' என்று பதறிப் போய்க் கேட்ட சர்மாவுக்கு அவனால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை. செய்வத்றியாது