பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நா. பார்த்தசாரதி

னான் அவன். நெஞ்சு படபடக்கப் பத்திரிகைகளைப் புரட்டிப் படித்தால் மேலும் அந்தப் புதிர் நீடித்தது.

முந்திய இரவு ஒரு ரிப்போர்ட்டிங் விஷயமாக வெளியே சென்ற நிருபர் எழில்ராஜா வீடு திரும்பவில்லை என்றும் சமூக விரோதிகளால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் மட்டுமே ஒரு சிறிய செய்தி வெளியாகி இருந்தது அதுவும் சில பத்திரிக்கைகளில் மட் டுமே வெளிவந்திருந்தது. வேறு சில பத்திரிகைகளில் அந்த விவரமே இல்லை. மர்மம் தொடர்ந்தது தான் ஏவிய ஆட்கள் அவனைக் கடத்திக்கொண்டு போயிருக்கும் பட்சத் தில் உயிரோடு தப்ப விட்டிருக்க மாட்டார்கள் என்பதிலும் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை காரியம் திட்ட மிட்டபடி முடிந்து விட்டால் மறுபடி தன்னை அவர்கள் உடனே சந்திக்க வேண்டியதில்லை என்றும், திட்ட மிட்டபடி முடியா விட்டால் மட்டுமே சந்திக்கலாம் என்றும் ஏற்பாடாகியிருந்தது பதற்றத்தோடு கன்னையனைக் கூப்பிட்டு, "நேற்றிரவு அல்லது இன்று காலை தன்னை யாராவது வீட்டுக்குத் தேடி வந்தார்களா? என்று விசாரித் ததில் அவன் கூர்க்காவிடமும் செண்ட்ரியிடமும் கேட்டு விட்டுத் திரும்பி வந்து தெரிவிப்பதாகப் புறப்பட்டுப் போனான். . - x x

போய்விட்டுத் திரும்பி வந்து அவன் தெரிவித்த செய்தி ஏமாற்றமளிப்பதாக இருந்தது. நிமிஷ வாரியாகப் பார்க்க வந்தவர்களின் பெயரை செனட்ரி குறித்து வைத்திருந் தான். வேணுகோபால சர்மா வந்து போன பின் இரவு யாருமே திருவைக் காண வரவில்லை. காலையில் மட்டும் சில கட்சி ஆட்கள், தொழிலதிபதிர்கள், இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் வந்திருந்தனர். முந்திய மாலை கொலைககு இரகசியமாக ஏவப்பட்டவர்கள் யாருமே திரும்பவும் அவனைப் பார்க்க வரவில்லை என்பதிலிருந்து காதும், காதும் வைத்தாற்போல் ஆளைக் கடத்திச் சென்று தீர்த்து விட்டிருப்பார்கள் என்றே அநுமானிக்க முடிந்தது.