பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ந. பார்த்தசாரதி

தத்தெளிவற்ற நிலையிலும் காலை மாலை தினசரிகளில் திரு காட்டும் அளவு கடந்த ஆர்வம் டாக்டர்களை யோசிக்க வைத்தது. நர்ஸ் மூலமும் மற்ற உதவியாளர்கள் மூலமும் செய்தித்தாள்களில் திரு படிப்பது என்ன என்பதை இரகசியமாகக் கண்காணித்துக் கண்டறியக் கூட அவர்கள் முயன்றார்கள்.

"இளம் பத்திரிகை நிருபர் எழில்ராஜா காணாமற். பாய் இன்றுடன் பத்து நாட்களாகின்றன. அவரைக் கடத்திக் கொண்டுபோய்க் கொலை செய்திருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார்க்ள்’’-என்று முதன் முதலாகக் கொலை பற்றிய பிரஸ்தாபம் பத்திரிகைகளில் வெளிவந்த தினத்தன்று மீண்டும் தினசரிகளைப் படித்துக் கொண்டி ருக்கும் போதே திரு மூர்ச்சையானான். திரு இந்தப் பத்து நாள்வரை தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒய் வெடுக்கிறார் என்று மட்டுமே திருவைப் பற்றிய செய்தி வெளிவந்திருந்தது. ஒரே எதிர்த் தரப்புப் பத்திரிகை மட்டுமே, 'அமைச்சர் திருவுக்கு சித்தபிரமை- அடிக்கடி நினைவு தவறுகிறது. திடுக்கிடும் உண்மை பொதுமக் களுக்கு மறைக்கப்படுகிறது'-என்று தலைப்புச் செய்தி வெளியிட்டுப் பரபரப்பூட்டியிருந்தது. கன்னையா மறுத்து அறிக்கை வெளியிட்டான். அமைச்சர் திரு அவர்களின் உடல்நிலைப்பற்றித் தாறுமாறாகவும். தவறுதலாகவும் பத்திரிகைகளில் வெளிவருகிற செய்திகளைக் கண்டித்து மறுத்துவிட்டு 'ஓய்வு கொள்வதற்காக வந்த பழைய செய்திகளையே மீண்டும் உறுதிப் படுத்தியிருந்தான் கன்னையா. - -

முழுமையாக மாதம் ஒன்று ஓடிவிட்டது. கடத்தப்பட் டதாகக் கருதப்படும் எதிர்க்கட்சிப் பத்திரிகையாளர் எழில்ராஜா உயிர்ோடிருககிறாரா இல்லையா என்று கண்டுபிடிக்கக் கூ டப் போலீசுக்குத் து ப் பி ல் ைல என்கிற பாணியில் சில பத்திரிகைகளில் க ண் டன த்