பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - - நா. பார்த்தசாரதி

பயந்து ஒடுங்கியிருந்த அவனது எதிரிகள் மெல்ல அவனுக் கெதிராகப் போர்க்கொடி காட்டத் தொடங்கினார்கள்.

"எவ்வளவு நாள்தான் ஒரு சித்தஸ்வாதீனமற்ற ஆளை அமைச்சராக வைத்திருப்பது? லஞ்சம் மூலம் நிறையப் பணம் வேறு பண்ணியாயிற்று. ஆரோக்கியமாக இருந்தபோது லஞ்சம். நோயாளியான பின்னும் பதவியா? என்று திருவுக்கு எதிராகக் குரல் கிளம்ப, ஆரம்பித்திருந்தது.

22

எதிலும் தர்ம நியாயங்களைப் பற்றிக் கவலைப் பட்டிராத அவன் இயக்கத்து ஆட்கள் அரசியலிலும் அப்படித்தான் இருந்தார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தை உடனே பயன்படுத்திக் கொண்டு முன்னேறவும், பணம் பண்ணவும் ஆசைப்பட்டார்கள். திரு சித்தஸ்வாதீனம் அற்றவனாகி மாதக் கணக்கில் படுத்த படுக்கையாகி மருத்துவமனையில் விழுந்து விட்டான் என்றதும் அவனது எதிரிகள் பலருக்கு கொண்டாட்டமாகி விட்டது. பத்திரிகைகளில் அவனது இயக்கத்தைச் சார்ந்த ஆட்களே ஜாடைமாடையாக அவனைக் குறிப்பிட்டு லஞ்ச ஊழல் பேர் வழிகள் பதவி விலகி.ாக வேண்டும்’- சொத்துக் கணக்கைப் பகிரங்கமாக வெளியிட்டாக வேண்டும்’ என் றெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள். அவன் கட்சிக்காகவும், இயக்கத்துக்காகவும் பம்பரமாக ஒடியாடி உழைத்துக் சிரமப்பட்ட நாட்களைப் பற்றிய விசுவாசம் இப்போது யாருக்கும் இருக்கவில்லை. யானை வலுவிழந்து தளர்ந்து, படுத்தால் எறும்பு கூட அதன் காதில் புகுந்து கடித்துவிட முடியும். கண் முன் விழுந்த எலும்புத் துண்டிற்காகத் தெரு நாய்கள் அடித்துப் பிடுங்கிக் கொள்வது போல், பதவிக்காக மனிதர்கள் நாயாகப் பறந்தார்கள். அசிங்க மான அளவு பதவியை அடைய அவசரப்பட்டார்கள். இவ்வளவிற்கும் நடுவில் வேறு ஏதோ வேலைய்ாக