பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。其4 நா. பார்த்த சாரதி

இயல்பாய் ஏற்கெனவே அழகாயிருந்த சண்பகம் தரையில் அமர்ந்து பூத்தொடுக்கும் போது மேலும் அழகாகக் காட்சியளித்தாள். நாட்கள் இலையுதிர் காலத் துச் சதகுகள் போல், உதிர்ந்து விட்டன. எந்தப் பிறவியில் செய்திருந்த புண்ண்னியமோ ஜமீன் ஆட்கள் அவனை அடித்து உதைத்துச் சுயநினைவற்ற நிலையில் தேரடி :ைதானத்தில் கொண்டுவந்து போட்டு விட்டுப் போன போது பண்டாரமும் அவர் மகளும் அவனை முதலில் பார்த்து இருள் புலரு முன்பே நந்தவனத்து மண்டபத் துக்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள்.

பெரிய காடு போல் பரந்திருந்த அந்த நந்தவனத்தின் நடுவே பூத்தொடுக்கவும் சந்தனம் அரைக்கவும் பயன்பட்ட அந்த மண்டபத்தில் அவன் தலைமறைவாக தங்கிக் குணம் பெற முடிந்தது. -

சண்பகம் சொல்லியிருந்ததுபோல் மனமும், உடலும் நலிந்து போயிருந்த அவனைப் பசுமை கமகமக்கும் சுத்த மான அந்தக் காற்றும், மலர்களும் சந்தனமும் இடை விடாமல் மணக்கும் அந்த மண்டபமும் தான் குணப்படுத்தி யிருந்தன. பூஞ்செடிகொடி மரங்களைத் தவிர நந்தவனம் நிறைய மூலிகைகள் மருந்துப் பச்சிலைகளை வளர்த் திருந்தார் பண்டாரம், பூத்தொடுப்பது தவிர நாட்டு வைத்தியம், மாந்த்ரீகம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து ஆகியவற்றிலும் முத்துப்பண்டாரத்துக்கு ஈடுபாடு உண்டு. 'நீ கொஞ்ச நாளைக்கு இந்த நந்தவனத்துக் குள்ளேயே தலைமறைவா இருந்துக்க! அதுதான் உனக்கு நல்லது தம்பி உன் உயிருக்குக் கருக்கட்டிக்கிட்டு அலையப் போறாங்க'- பண்டாரம் அவனை எச்சரித் 莎可可·

'நான் உயிருக்குப் பயப்படலை! உலகத்திலே எவ்வளவு காலம் இருக்கணும்னு முடிஞ்சிக்கிட்டு வந்திருக் கமோ அவ்வளவு காலம் நம்மை யாரும் எதுவும் பண்ணிட