பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூல்க்கனல் 159

அதுவரையில் நம்பியிராத கடவுளுக்குக்கூட நன்றிகூறத் தவித்தது அந்தரங்கம். நேர்மையையும், கைசுத்தத்தை யும் கட்டிக் காக்க எழுத்து மூலம் போராடும் அந்த இளம் பத்திரிகையாளன் தன் மகன் என்றறிந்த போது அவனுக் குப் பெருமிதம் பிடிபடவில்லை. அவனைக் கொலை செய்ய ஆள் ஏவித் தூண்டினோம் என்று நினைக்கவே இப்போது அருவருப்பாக இருந்தது. பதவியும் புகழும் எப்படிப்பட்ட கொலை பாதகத்துக்குத் தன்னை தூண்டி விட்டிருக்கின்றன என்பதை மறுபடி நினைத்துப் பார்த்த போது நாண மாக் இருந்தது. ஆயிரம் பேர் புகழ்கிற அளவு உயரத்துக்குப் போய் விடுகிற ஒருவன்-ஒரே ஒருவன் இகழ்வதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவு கர்வம் படைத்தவனாகி விடுவதைத் தவிர்க்க முடியாது தான். புகழ் கள்ளைவிடப் போதை மிகுந்தது’-என்று பல முறை பலருடைய வாசகங்களாகக் கேள்விப்பட்டிருந்த வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் இப்போதுதான். அவனுக்குத் தெளிவாகப் புரிவதுபோலிருந்தது.

இன்று இந்தப் பலவீனமான வீழ்ச்சி நிலையில் சுய விசாரணையிலும் சுய விமர்சனத்திலும் ஈடுபட்ட அளவு இதற்கு முன்பு எந்த நாளிலும், எந்த நாழிகையிலும் அவன் மனம் ஈடுபட்டதே இல்லை. தன்னைத் தானே திரும்பிப் பார்த்து உள் முகமாக மடக்கி மடக்கி விசாரிக் கும் ஆத்ம விசாரணை என்பதை எல்லாம் அவன் அநுப விக்க நேர்ந்ததே இல்லை. அந்தந்த விநாடிகளில் எப்படி எப்படித் தோன்றியதோ அப்படி, அப்படி எல்லாம்தான் இதுவரை அவன் வாழ்ந்திருந்தான். முன் யோசனை பின் யோசனைகளில் ஈடுபட அவனுக்கு நேரமிருந்த தில்லை. எந்த முன்னேற்றமும் ஜெட் வேகத்தில் தன்னை நாடி வரவேண்டுமென்று தவித்து ஓடியிருக்கிறான் அவன். தடுக்கி விழுந்து, தளர்ந்து படுத்த பின்பே தான் வந்த வேகத்தில் தன் காலடியில் யார், யார் எது எது சிக்கி, மிதி பட்டு, நசுங்கியிருக்கக் கூடும் என்பதே உணர்வில் பட