பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 - 島r, பார்த்தசாரதி

டிய வயதுள்ள பெண்களைக் கைத்தாங்கலாக உடனழைத் துக் கொண்டு, பிரார்த்தனைக் கூட்டத்துக்கும் உலாவவும் சென்ற அமரர் தேசத்தந்தை காந்தியடிகளைப் பற்றி யே காந்தியார் கட்டிளங் குமரிகளின் தோள் மேல் கை போட்டு நடக்கிறார்' என்று தான் எழுதியது நினைவுக்கு வந்தது. அவர்களோ, அவர்கள் சார்ந்திருந்த இயக்கமோ அப்படி எல்லாம் எழுதியதற்காகத் தன்னைக் கொலை செய்து தீர்த்துக் கட்டிவிட ஆள் ஏவியிருந்தால் என்ன ஆகி யிருக்கும் என்பதையும் சேர்த்தே இப்போது திரு நினைத் தான். இளமையில் தன்னை அரண்மனையிலிருந்து வெளியே துரத்தி அடித்துப் போட்டு விட்டார்கள் என்ப தற்கு இதே எழிலிருப்பு ஜமீன் குடும்பத்துப் பெண்களை யும், ஆண்களைப் பற்றிப் பின்னால் தான் எவ்வளவு தாறு மாறாக எழுதியும், பேசியும் இருக்கிறோம் என்பதை எல் லாம் கூட நினைத்துப் பார்த்தான். அவற்றிற்காக அவர் கள் தன்னைப் பழிவாங்க முயன்றிருந்தால் தானே இப் போது உயிரோடு இருந்திருக்க முடியாதென்றும் தோன் றியது. முதலில் தன்னை அரண்மனையிலிருந்து துரத்தி அடித்துப் போட்டதே ஜமீன்தாருக்குத் தெரிந்து நடந்ததோ அல்லது "இப்படி எல்லாம் செய்தால் ஜமீன் தாருக்குப் பிடிக்கும் - என்று ஜமீன் அடியாட்களே தாங்க ளாகத் திட்டமிட்டுச் செய்தார்களேர் என்று கூட இந்த நிமிடம் வரை திருவுக்கு அந்தரங்கமாக ஒரு சந்தேகம் உண்டு. ஏனென்றால் ஜமீன்தார் இப்போது நடந்து கொள்ளும் பக்குவத்தைப் பார்க்கும்போது இந்த மனித ரிடம் வைரம் வைத்துக் கொண்டு ஆட்களைப் பழிவாங்கும் கீழான குணம் இருந்திருக்க முடியும் என்று நம்பக் கூட. முடியாதபடி இருந்தது. சகிப்புத் தன்மையும், நிதான முமே கலாசாரத்தின் அடையாளங்கள். வன்முறையும், ஆத்திரமும் கலாசாரமின்மையின் அடையாளங்கள். க்ர்ட்டுமிராண்டித் தனத்தின் அடையாளங்கள் என்று இன்று பின்னால் திரும்பிப் பார்க்கும்போது அவனுக்குத்