பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் 15

முடியாது. என்னிக்குப் போகணும்னு இருக்கோ அதுக்கு மேலே கால்நாழி கூட இருந்துறவும் போவதில்லே,’’

'இந்த வேதாந்தப் பேச் செல்லாம் மூட்டை கட்டி வையி தம்பீ! இப்போ நீ ரொம்ப முன் போஜனையோட வும் ஜாக்ரதையாகவும் நடந்துக்க வேண்டிய நேசம். உள் பட்டணத்து உடையாருங்க பெரிய போக்கிரிங்க. பழி பாவத்துக்கு அஞ்ச மாட்டாங்க."

'நானும் அதே பெரிய உடை யாருக்குப் பிறந்த மகன் தான்.'" - - - 'அந்த வீறாப்பெல்லாம் இப்போ வேணாம்! அதுக் கெல்லாம் இது சமயமில்லே தம்பீ!’’ - -

இதமாகப் பேசி முத்துப் பண்டாரம் அவனை நிதானப் படுத்தினார். அவருடைய வயதும் பக்குவமும் நடை முறை வாழ்க்கையின் ஞானங்களை அவருக்குப் போதிய அளவு அளித்திருந்தன. அடித்துப் போட்டுவிட்டார்கள், அவமானப்படுத்திவிட்டார்கள் என்ற உணர்வுக் கொந் தளிப்பில் அவன் இருந்தான். அவர்கள் நயவஞ்சகமாக நள்ளிரவில் பாதித் தூக்கத்தில் எழுப்பித் தன்னை அடித்து உதைத்து அவமானப்படுத்தியது போல் யாருக்கும் தெரியாமல் நடு நிசிக்கு மதில் சுவர் ஏறிக் குதித்து உள் பட்டணத்தில் புகுந்து சினைக் கிருஷ்ண ராஜ உடையார் என்ற கிருஷ்ணராஜைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்துவிடவேண்டும் போல் திருமலையின் கைகள் துறுதுறுத்தன. பண்டாரமும் சண்பகமும் பக்கத்தி லேயே இருக்கவில்லையானால் அவன் எந்தப் பைத்தியக் காரத்தனமான முடிவுக்கும் சுலபமாக வந்திருப்பான். அவனுடைய உடம்பிலிருந்த காயங்கள், மனத்திலிருந்த .பழிவாங்கும் வெறி, குரோதம் எல்லாவற்றையும் அவர்கள் தான மெல்ல மெல்லக் குணப்படுத்தினார்கள். ஆற வைத்தார்கள்.

உலகில் மனிதர்களைக் குணப்படுத்தும் மருந்துகளில், எல்லாம் மிகப் பெரிய மருந்து அன்புதான். அன்பும்