பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நா. பார்த்தசாரதி

ளையை முறைப்படுத்துவது போல் பதவியை முறைப் படுத்தியவர்கள் யார் என்று எண்ணியபோது அவனுக்கு அதை நினைக்கவே கூச்சமாயிருந்தது.

இன்று இதற்கெல்லாம் பாவமன்னிப்பு என்று எதுவும் இருப்பதாகப் படவில்லை என்றாலும் இவற்றைத் திரும்ப நினைக்கவும் பிடிக்கவில்லை, நினைக்காமல் தவிர்க்கவும் முடியவில்லை. தனக்கு அடுத்தாற்போல் தொழில் வள்ர்ச்சி மந்திரியாகி இருப்பவனுக்கு எதுவுமே தெரி யாது-இலாகா அவனிடம் சிக்கிக் கொண்டு திண்டாடப் போகிறது" என்று தோன்றியது-அடுத்த கணமே தான் தொழில் வளர்ச்சி மந்திரியான போது தனக்கு என்ன தெரிந்திருந்தது என்ற கேள்வியும் உள்ளத்தில் பிறந்தது. அப்ஸ்களை எல்லாம் தேசிய மயமாக்கப் போகிறோம்-. என்று நாலு கூட்டத்தில் பேசினால், "ஐயோ, அப்படிச் செய்து விடாதீர்கள்! இந்தாருங்கள்! இதைக் கட்சி நிதிக்கு வைத்துக் கொள்ளுங்கள்!' -என்று பஸ் உரிமையாளர்கள் எல்லோருமாகத் தேடிவந்து சில லட்சங்களைக் காலடியில் காணிக்கையாகப் ப ைட ப் பார் க ள். தியேட்டர்களை எல்லாம் தேசிய மயமாக்கப் போகிறோம் என்று மிரட்டி னால் தியேட்டர் உரிமையாளர்கள் ஓடிவந்து காணிக்கை செலுத்தப் போகிறார்கள். இந்த மிரட்டல் வேலையைப் பெரிய நிபுணத்துவத்தோடுதான் செய்ய வேண்டுமா என்ன? தாலுகா ஆபீஸ் பியூன்கூடப் பிரமாதமாக இதைச் செய்துவிட முடியும் என்று தோன்றியது. தகுதி, திறமை இவைகளை எல்லாம் பெரிதாக மதிக்க வேண்டிய அவசிய மில்லை என்கிற மரபைத் தானும் தன் போன்றவர்களுமே ஒரு தலைமுறைக்கு ஆரம்பித்து வைத்துக் கற்றுக் கொடுத் தும் விட்டோம் என்பது இப்போது திருவுக்கே உறைத்தது. தங்களுக்கு வேண்டியவர்களைத் தகுதியும் திறமையும் உள்ளவர்களாகச் சொல்லிப் புகழவும் தங்களுக்கு வேண் டாதவர்களை அவர்கள் உண்மையிலேயே தகுதியும் திறமையும் உள்ளவர்களாக இருந்தாலும் இல்லாதவர்