பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் 17 i

கொண்டு அவனும் அதை அவ்வளவில் விட்டு விட்டான். சர்மாவை மேலும் தூண்டித் துருவித் தொந்தரவு செய்ய வில்லை. х -

எப்பிடியோ போகட்டும்? அவன் நல்லா இருந்தாச் சரிதான்!' - ன்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத் தான் திரு. -

மேற்கொண்டு அங்கே தங்கினால் திரு மறுபடியும் எழில்ராஜாவைப் பற்றிய உரையாடலைத் தன்னிடம் தொடர்ந்து ஆரம்பித்து விடுவானோ என்ற பய்த்தினால் சர்கா சொல்லி விடைபெற்றுப் பின் அங்கிருந்து வெளியே நழுவினார்.

திருவுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது. வாழ்வில் இதுவரை இத்தனை பெரிய தனி மையையும் தளர்ச்சியையும் அவன் உணர்ந்ததேயில்லை. தான் செய்த தவறுகளையும் செய்யப்போகிற தவறு களையும் நியாயப்படுத்தி மக்களை நம்ப வைக்கப் போது மான துணிவு இருக்கிற வரையில்தான் ஒருவன் சரியான அரசியல்வாதி. "தவறுகள் செய்துவிட்டோமா? என்ற பயமும் , பதற்றமும் குற்ற உணர்வும் என்றைக்கு முதன் முதலாக ஒர் அரசியல்வாதிக்கு ஏற்படுகிறதோ அன்றே அத்த வினாடி முத்ல் அவன் அரசியலுக்குத் தகுதியிழந்து ஆன்மீகவாதியாகத் தொடங்கி விட்டான் என்று பொருள் என்பதாகத் தானே பலரிடம் பலமுறை அரசியலுக்கு இலக் கணம் சொல்லியிருப்பதை இப்போது திரும்பவும் நினைவு கூர்ந்தான் திரு.

தன்னுடைய அந்த இலக்கணப்படி இப்போது தானே ஆன்மீக வாதியாகத் தொடங்கி விட்டோமோ என்று திரு வுக்குத் தோன்றியது. செய்த தவறுகளுக்கு உடனே வருந்தி நிற்கிற மனமும், மேலே செய்ய வேண்டிய தவறு களைச் செய்யத் தயங்கி நிற்கிற குணமும் உள்ளவன் அர சியலில் நீடிக்க முடியாது என்பது திருவின் நீண்டகாலத் தத்துவமாயிருந்தது. 'அரசியல்வாதி தோற்பதின் அடிை.