பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நா. பார்த்தசாரதி

அண்ணனும் கட்சி மேலிடத்து ஆட்களும் தன்னை நேரில் சந்தித்துச் சமாதானப் படுத்துவதற்காக மருத்துவ மனைக்கே உடன் தேடி வருவார்கள் என்று எண்ணியிருந்: தான் திரு.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவனது பதவி விலகலை ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் அதுவரை ஒத்துழைத்தற்கு நன்றி என்றும் கட்சி மேலிடமும், அண்ணனும் கொடுத்த பதில் கடிதங்களோடு திரும்பி வந்தான் கன்னையா.

இவ்வளவுக்கும் காரணம் எழில்ராஜாவின் காரசார மான கட்டுரைகள் தான் என்பது புரிந்திருந்தும் இப்போது, அவன் மேல் திருவுக்கு ஆத்திரம் வரவில்லை. தன்னுடைய செல்வாக்கையும், புகழையும் தரைமட்டமாக்கிய எழில் ாாஜாவை ஆள் ஏவி விட்டுக் கொலை செய்ய முயன்ற திரு வேறு, இந்தத் திரு வேறு. வாழ்க்கையில் தன்னைப் போல் ஒரு தலைமுறையையே தவறான பாதைகளில் வழி காட்டிச் சீரழிக்காமல் நேர்மையுள்ள துணிச்சல்காரனாகத் தனக்குத் தெரியாமல் தன் மகனாவது இன்று நல்லபடி வளர் ந் தி ரு க் கி ற னே என்று பெருமையாயிருந்தது அவனுக்கு. . .

மறுநாள் காலைத் தினசரிகளில் திரு மந்திரி பதவியி லிருந்தும், கட்சியிலிருந்தும் ராஜிநாமாச் செய்துவிட்ட செய்தி பிரதானமாக வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ந்து. இரண்டு மூன்று தினங்கள் பிரஷர் அதிகமாகி அவன் உடல் நிலை மிகவும் கெட்டுச் சீரழிந்தது.

டாக்டர்கள் கன்னையனையும் சர்மாவையும் அழைத்து, 'இந்தப் பரபரப்பான சூழ்நிலையிலிருந்து இதுவரை ஒரு மாறுதலாக வேறு எங்காவது அழைத்துப்போய் ஒய்வு:

கொள்ளச் செய்வது நல்லது”-என்றார்கள். .

சர்மாவும் கன்னையனும் மெதுவாக இந்த யோசனை யைத் திருவிடமே கூறி, அவன் அபிப்பிராயத்தைக் கேட்.