பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நா. பார்த்தசாரதி

முயன்று பார்ப்பதாக அவனிடம் கூறிவிட்டு, சர்மா 'மீண்டும் வெளியே புறப்பட்டுப் போயிருந்தார்.

26

எழிலிருப்புக்குப் புறப்படுவதற்கு முன் திருவின் வற். புறுத்தலைத் தட்ட முடியாமல் அவனுடைய மகன் எழில் ராஜாவைப் பார்த்து விட்டு வரப்போன சர்மா திரும்பி வந்து தெரிவித்த பதில் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாயி ருந்தது.

- பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அவன் சார்ந்திருக்கும் பத்திரிகை நிர்வாகமே இப்போது அவனை இரகசியமாக எங்கோ வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டது” என்றார் சர்மா, -

மகனாகத் தன்னை வந்து பார்க்கப் போவதில்லை. தானாக அவனைப் போய்ப் பார்க்கவும் முடிய. மல் தட்டிப் போய் விட்டது என்பதை எண்ணிய போது திருவுக்குத் தன் மேலேயே வெறுப்பாயிருந்தது. மகன் தன்னை வெறுப்பதற்குக் காரணமான தன் அ ர சி ய ல், கட்சி, அதிகாரம், பதவி, லஞ்ச ஊழல் எல்லாவற்றிலிருந்தும் இன்றுதான் விடுபட்டாயிற்று. ஆனாலும் மகனுக்கு இன்னும்கூடத் தன் மேல் ஆத்திரமாகத் தானிருக்கும் என்று தோன்றியது. -

மகனைச் சந்திக்க முடியாத ஏமாற்றத்தோடு எழிலிருப் பிற்குப் புறப்பட்டிருந்தான் திரு. அவன் மருத்துவமனையி லிருந்து அதிகாலையில் விமான நிலையத்திற்குப் புறப் பட்ட போது, அண்ணன் திரு வாழ்க! வாழ்க!” என்ற குரல் முழக்கங்களுடனும், மாலைகளுடனும், மலர்ச் செண் டுகள், எலுமிச்ச பழங்களுடனும் வழியனுப்பவரும் யாரும் அப்போது தென்படவில்லை. பக்தியோடும், பயத்தோடும்