பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德) நா. பார்த்தசாரதி

துக்குப் புறப்பட்டாலும் பட்டணத்திலிருந்து எழிலிருப்பிற் குத் திரும்பினாலும் அவரை வர வற்க வழியனுப்ப ஒரு கூட்டம் அவர் பதவியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரைச் சுற்றி நிரந்தரமாக இருக்கும் என்பது நினைவு வந்தது அவனுக்கு. பதவியிலில்லாத காலத் திலும் பொது மக்களிடமும் சமூகத்திலும் அவருக்கிருந்த மரியாதை ஒரு சிறிதும் குறையவில்லை. தான் மட்டுமே இன்று மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடப்பட்டாற் போன்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை உணர்ந்தான் அவன். >

விமானத்தில் உடன் பயணம் செய்த சில பணக்காரர் களும், தொழிலதிபர்களும் கூடத் தன் அருகே வந்து அமர்ந்து பேசத் தயங்கினாற் போலத் தோன்றியது. இந்தப் பிரமைகளும், உணர்வுகளும், தாழ்வு மனப் பான்மையும் ஏற்படுவதைத் தன்னால் அப்போது தவிர்க்க முடியாமலிருப்பதையும் அவனே தெரிந்து கொண்டான்.

கவனிக்க ஆளில்லாமல் விமானத்திலிருந்து கீழிறங்கிச் சென்றால் திருவுக்கு மிகவும் வேண்டிய-கடந்த காலத்தில் அவனிடமிருந்து ஏராளமான உதவிகளைப் பெற்றிருந்த. அவனுக்குப் Liót). விதங்களிலும் கடன்பட்டிருந்த அந்த நண்பரே அவனை வரவேற்க நேரில் வந்திருக்கவில்லை. டிரைவரோடு காரை மட்டுமே அனுப்பியிருந்தார். தான் அப்போதே முக்கால் நடைப்பினமாகி விட்டதுபோல் உடலும் மனமும் தளர்ந்து போயிருந்தான் திரு.

விமான நிலையத்திலிருந்து நகருக்குள் போகாமல் அங்கிருந்து ஐம்பது அறுபது மைல் தொலைவிலிருந்த எழிலிருப்பிற்கு அப்படியே காரில் புறப்பட்டான் அவன். தன் வாழ்க்கை எங்கே எப்படி ஆரம்பமாகி வளர்ந்து எங்கே எப்படி இறங்கு முகமாகத் தணிகிறது என்பதைத் தானே எண்ணியபோது அவனுக்கே வேடிக்கையாகத் தானிருந்தது.