பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 183

கொண்டு புறப்பட்டிருந்த தன்னுடைய கார் மாலைக்குள்

அங்கு வந்துவிடும் என்று நம்பிளான் அவன். மிகவும்

களைப்பாயிருந்தது. விமானத்துக்காக மிகவும் அதிகாலை வில் கண்விழித்து எழுந்த சோர்வு சேர்ந்து கொண்டது.

எச்சரிப்பதற்கு யாரும் உடனில்லாததால் குடிக்கவேண்டும் என்று தோன்றியது. வாட்ச்மேனிடம் ஒரு நூறு ரூபாயை

கொடுத்து ரம்' வாங்கி வரச் சொன்னான். திருவைப் பல வருடங்களாகத் தெரிந்த அந்த வாட்ச்மேன், * “Tio

மட்டும் போதுங்களா? இல்லாட்டி வேறு ஏதாச்சும் இம்.

டாரணும்னாலும் சொல்லுங்க, செய்யிறேன்” என்று

குறுமபுத்தனமாகக் கண்களைச் சிமிட்டியபடி கேட்டான்.

வேண்டாம் என்பதற்கு அடையாளமாகத் திரு கையை

அசைத்தான். சண்பகத்துக்கும் பொன்னுசாமி அண்ண

னுக்கும் மைத்துனனுக்கும் சொந்த மகன் ராஜாவுக்கும். தான் இழைத்த துரோகங்களை எண்ணி கழிவிரக்கப்படும்

நிலையிலிருந்த அவன் வாட்ச்மேனின் விஷமத்தனமான

வினாவுக்குச் சற்றே எரிச்சலோடுதான் பதில்சொல்லியிருந் தான். உடல் நலம் குன்றி ஓய்வு எடுக்க வருகிற அவனை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்துச் சென்று எழிலிருப்பில் விடுவதற்குக் காகுடன் நண்பர்கள் வருவார்கள் என்று கன்னையனும் சர்மாவும் எதிர்பார்த் திருப்பார்கள். இப்படித் தனியாகக் கவனிப்பாரற்று வந்து அவன் இங்கே அவஸ்தைப் படப்போவது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாமில்லை. பகல் முழுவதும் குடியில் கழித்தான் அவன். மறுபடியும் வாட்ச்மேன், 'இட்டா ரட்டுங்களா? நல்ல சரக்கு...' என்ற போது, வெளியே போ! என்னைத் தொந்தரவு பண்ணாதே'-என்று அவனிடம் எரிந்து விழுந்தான் திரு. வாட்ச்மேனுக்கு அவனது சீற்றமான பதில் ஆச்சரியத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால் திருவின் நினைவில் அப்போதுதான் சிரம தசையிலிருந்த ஆரம்ப நாட்களும், சண்பகத்தின் காதலும் இருந்தன.