பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 185

தேரடிக்குப் போனதும் அவன் அதிர்ச்சியே அடைந் தான். தேர் இருந்த இடத்தில் சிதைந்து கருகிய மரக் குவியல்தான் இருந்தது. விசாரித்ததில் போன வருடம் யாரோ ஒரு வெறியன் தீ வைத்ததால் தேரே அழிந்து விட்டது என்றார்கள்.

தேரடி அநுமார் கோயில் இருண்டு கிடந்தது. உள்ளே பெருஞ் சுடராக அநாதி காலமாய் இடைவிடாது அணையாமல் எரியும் அகண்ட விளக்கின் ஜோதி தென்பட வில்லை. முகப்பில் ஒரு சிறு காடா விளக்கின் ஒளியில் ஐந்தாறு விடலைகள் காசு வைத்து மூணு சீட்டு விளை யாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. -

அதே தேரடியில் எந்த இடத்தில் அடிபட்டு விழுந்து இரத்தம் சொட்டச்சொட்ட இங்கிருந்து தீமையை எதிர்த்து இனி நமது போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று எண்ணினானோ அந்த இடத்தில் போய் நின்றான். நினைத்தான். இந்த ஊரின் வாழ்க் கைக்கே மூலாதாரமானதொரு ஜோதி என்று மக்கள் நம்பிய பாறை அநுமார் கோயில் விளக்கைப் பார்த்தபடி தான் முன்பு அவன் அப்படிச் சபதம் செய்திருந்தான்.

அத்த ஜோதியே இப்போது இல்லை. நந்தவனத்துக் குள் போனான். அங்கு நந்தவனமே இல்லை. நொடித்துப் போன ஜமீன் குடுமபம் அந்த இடத்தை ஹவுஸிங்போர்டுக்கு விற்று ஹவுஸிங் போர்டு அந்த இடத்தை புல்டோஸ்ர் வைத்துச் சமதரையாக்கிக் கோழிக் கூண்டுகள் மாதிரிச் சிறு சிறு வீடுகளைக் கட்டிக் கொண் டிருந்தது. , ,

பெருமாள் கோவிலுக்கும் தேரடிக்கும் நடுவிலிருந்த தாமரைக் குளம் வற்றிப் போயிருந்தது. கோயில் கோபு ரம் இருண்டு வவ்வால்க ள் கிறிச்சிட மரம் செடி கொடி முளைத்து பழுது பார்க்காவிடில் விழும் நிலைக்குச் சிதல