பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நா. பார்த்தசாரதி மாயிருந்தது. குளத்து மேட்டில் ஒரு சாராயக்கடை வந் திருந்தது. எழிலிருப்பில் எழில் கழன்று போய் மூதேவி வந்து குடிபுகுந்தாற் போலிருந்தது. -

ஒரு தலைமுறையின் நல்லுனர்ச்சிகள், அழகுகள் நம் பிக்கைகள், பண்புகள், கலாச்சாரங்கள் எல்லாம் அங்கே செத்துப் போயிருப்பது புரிந்தது. இந்தக் கல்ாச்சாரப் படுகொலைக்குத் தானும் ஒருகாரணம். தன் போன்ற ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்த அழிவுக்கு வித்திட்ட வர்களில் ஒருவன் என்பதை அவன் உள் வேதனையோடு உணர முடிந்தது அந்த மயக்கமான போதைத் தடுமாற்ற நிலையிலும் அவனுக்கு அப்போது ஒரு கவிதை இட்டுக் கட்டத் தோன்றியது. வாழ்வின் ஆரம்பத்தில் அவனுள் குடிகொண்டிருந்து பின்பு வெளியேறி ஓடிப்போன கவிதை உணர்வு சில கன்னங்கள் இன்று இப்போது மீண்டும் அவ லுள் வந்து புகுந்து அவனை ஆட்டிப்படைத்தது. அவன் தன்னைப் பற்றியே அக்கவிதையில் நினைத்தான்.

‘'தேரடி முனையில்

தெருவினக் கடியில் ஊரவர் ஒதுக்க

உற்றவர் வெறுக்க பேரெதும் இன்றிப்

புகழெதும் இன்றிப் பேதையாய்க் கிடந்து

புழுதியில் புரண்டேன் ஊரவர் கூடி

உற்சவம் எடுத்துப் பேரினை வளர்த்துப்

புகழின்ைப் பெருக்கி என்னுள் எதைக் கொன்றார்?

எள்ளில் எதை அழித்தார்?

எதை அவித்தார் என்பது இன்னும் பொருந்துமோ என